Categories: Cinema News latest news

கம்பேக் கொடுக்கப் போறாரா கார்த்திக் சுப்புராஜ்!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரெய்லர் தரமா இருக்கே!..

கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் ஜிகர்தண்டா படத்தை கையில் எடுத்திருக்கிறாரே பழைய படி இயக்குவாரா? என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதைவிட தரமாக ஒரு படத்தைக் கொடுக்கப் போவதாகவே டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி வெளியாகிறது.

Also Read

இதையும் படிங்க: பாத்து செய் செல்லம் பசங்க மனசு வீக்கு!.. ஹார்ட்பீட்டை எகிற வைக்கும் மாளவிகா மோகனன்…

தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ என ராகவா லாரன்ஸ் சொல்லும் போதே அனைவரும் கார்த்திக் சுப்புராஜ் தலைவர் ரஜினிகாந்தை வைத்து தரமான சம்பவத்தை செய்துள்ளார் என கொண்டாடி வருகின்றனர்.

படம் முழுக்கவே எஸ்.ஜே. சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இடையே தான் ஓடும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், பீஸ்ட் படத்தில் நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: மது – மாது.. தடம்புரண்ட சுதாகரின் வாழ்க்கை!.. கனவு நாயகன் கோமாளி ஆன கதை!..

பல குறியீடுகளுடன் கிளின்ட் ஈஸ்ட் உட் படங்களின் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கண்டிப்பாக இந்த தீபாவளி ரேஸில் கார்த்தியின் ஜப்பானை கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தட்டித் தூக்கி விடும் என்றே தெரிகிறது.

லியோ டிரெய்லரை போலவே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரெய்லரும் தரமாக கட் செய்யப்பட்டுள்ளது. டிரெய்லர் போலவே படமும் தரமாக இருந்தால் இந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜுக்கு தரமான கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாதியில் ஏமாற்றாமல் இருந்தால் சரி.

Published by
Saranya M