தலைவர் தம்பி தலைமையில் படம் வெற்றியை தொடர்ந்து எங்கு பார்த்தாலும் ஜீவாவின் பேட்டிதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது . விஜயின் ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி இந்த இரு படங்கள்தான் பொங்கல் ரேஸில் குதிக்கும் என எதிர்பார்த்தனர்.
ஆனால் ஜன நாயகன் படம் வராததால் கார்த்தியின் வா வாத்தியாரே படம் ரிலீஸ் ஆனது. வா வாத்தியாரே படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. அதே நேரம் பராசக்தி படமும் ரசிகர்களுக்கான படமாகவும் இல்லை. வரலாற்று சிறப்பு மிக்க ஒரு சம்பவத்தை மீண்டும் நியாபகப்படுத்திய மாதிரிதான் படம் அமைந்தது. ஆனால் திரைக்கதை எப்போதும் போலவே இருந்தது.
ஹீரோ வில்லன் என்ற வகையிலேயே பராசக்தி படத்தை இயக்குனர் கொண்டு போய்விட்டார். இதற்கிடையில் சத்தமே இல்லாமல் வெளியானதுதான் தலைவர் தம்பி தலைமையில் படம். வித்தியாசமான கதை. மூன்றே நபர்தான் முகம் தெரிந்தவர்கள். அவர்களை வைத்துதான் படமே நகர்கிறது. படம் ஹிட். அதனால் அடுத்தடுத்து படத்திற்கான ஸ்கிரீன்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றது.
இந்த நிலையில் ஜீவா நண்பன் படத்தில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவத்தை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நண்பன். ஆக்ஷன் படங்களிலேயே நடித்து வந்த விஜயை மிகவும் கூலாக இந்தப் படத்தில் காட்டினார் சங்கர். ஏற்கனவே விஜயின் ரசிகராக இருந்த ஜீவா இந்தப் படத்திற்கு பிறகு விஜயின் நல்ல நண்பராகவும் மாறினார்.
ஒரு சமயம் நண்பன் படத்தில் விஜய் நடிப்பதாக இல்லை என்ற ஒரு தகவல் வெளியானதாம். இது ஜீவாவுக்கு பெரும் ஷாக். உடனே சங்கரிடம், ‘விஜய் நடிக்கலைனு சொல்றாங்க. நானும் நடிக்கல’ என கூறியிருக்கிறார். ஏனெனில் வேலாயுதம் படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. அதனால் தேதி பிரச்சினையால் விஜய் நடிக்க மாட்டார் என்று தகவல் அப்போது வெளியானதாம்,
அதனால் விஜய்க்கு பதில் மகேஷ்பாபு அல்லது சூர்யாவை அப்ரோச் பண்ண எண்ணியிருந்தார்களாம். ஜீவா இப்படி சொன்னதும் ‘அதெல்லாம் ஒன்னும் இல்ல. விஜய் சார் வருவார்’ என சொல்லி நல்ல நண்பன் பாடலை விஜய் இல்லாமல் சூட் செய்துக் கொண்டிருந்தார்களாம். இதை பற்றி ஜீவா கூறும் போது ‘ நல்ல நண்பனு பாடல் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். நானும் நடிச்சுட்டு இருந்தேன். ஆனால் எந்த நண்பன்னு தெரியாமலேயே அந்த பாடல் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகுதான் விஜய் சார் வந்தாரு’ என கூறினார்.




