ஜன நாயகனை எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை தந்திருக்கிறது ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம். இந்தப் படத்தை நிதிஷ் சஹதேவ் இயக்கியிருக்கிறார். இயக்குனரிலிருந்து டெக்னீசியன்கள் வரை அனைவருமே மலையாள சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான். அதனால்தான் என்னவோ இந்தப் படம் மக்களை கவர்ந்திருக்க்கிறது.
சமீபகாலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் மலையாள திரைப்படத்திற்கு என ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. கோலிவுட் போல் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தே மலையாளத்தில் படங்கள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் கதையும் நம் மக்களை திருப்திபடுத்தியதாகவே தெரிகிறது.
ஜன நாயகன் படம் ரிலீஸாகததால் இந்த பொங்கல் வெறும் போரிங் பொங்கலாக இருக்குமே என ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் இருந்தனர். ஒரு பக்கம் பராசக்தி , வா வாத்தியாரே திரைப்படம் ரிலீஸானாலும் அந்தப் படங்களுக்கான வரவேற்பு குறைவுதான். லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் என்பதை போல இந்த தலைவர் தம்பி தலைமையில் படம் அமைந்திருக்கிறது.
பொங்கல் விடுமுறையை ஜாலியாக கழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக இந்தப் படத்தை வந்து பார்க்கலாம். மனம் விட்டு சிரித்து விட்டு போகலாம். அந்தளவுக்கு ஒரு ஃபேமிலி நகைச்சுவை படமாக இது அமைந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் படத்தை புரோமோட் செய்யும் வகையில் ஒவ்வொரு ஊர்களில் இருக்கும் தியேட்டருக்கு ஜீவா போகும் போது அவருக்கு கிடைக்கும் வரவேற்பு பெரிய அளவில் இருக்கிறது.

இந்த நிலையில் ஜீவா பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜயை பற்றி பேசியுள்ளார். அதாவது பூவே உனக்காக படத்தில் இருந்தே அவருடைய படங்களை பார்த்து நாங்கள் வளர்ந்திருக்கிறோம். நண்பன் படத்தில் அவருடன் நான் நடித்தேன். நண்பன் படமும் பொங்கல் ரிலீஸாகத்தான் வெளியானது. அதன் பிறகு 14 வருடங்கள் கழித்து இந்த பொங்கலுக்கு அண்ணனுக்கு பதிலாக இந்த தம்பி பொங்கலாக அமைந்திருக்கிறது என்று ஜீவா கூறினார்.
ஜன நாயகன் படம் பிரச்சினையில் இருக்கும் போது விஜய்க்காக வாய்ஸ் கொடுத்த போது விஜய் ரசிகர்களும் தம்பிகளும் உங்களை செலிபிரேட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இதை பற்றி என்ன சொல்றீங்க என்று கேட்ட போது, என்னைக்குமே மக்கள் செலிபிரேட் பண்ணியிருக்காங்க.
அவருடன் நடிச்சிருக்கிறேன். அவருடன் நல்ல நட்பு இருக்கிறது. படத்துல கூட பார்த்தால் தெரியும், ஸ்பெஷல் தங்க்ஸ் நண்பன்-னு இருக்கும். உண்மையிலேயே விஜய் சாரை மனசுல நினைச்சுதான் அப்படி போட்டிருக்கிறோம். எனக்கும் அவருக்குமான நெருக்கத்தை எப்படி சொல்றதுனு தெரியல. உண்மையிலேயே அவருக்கு என்னோட சப்போர்ட் இருக்கும் என ஜீவா கூறியிருக்கிறார்.




