மகனை பக்கத்துல வச்சுக்கிட்டே பார்க்குற வேலையா இதெல்லாம்!.. துணிவு வில்லன் ரவுசு தாங்கலப்பா!..

Published on: December 21, 2023
---Advertisement---

நடிகர் ஜான் கொக்கன் மற்றும் அவரது மனைவி பூஜா ராமச்சந்திரன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், பல இடங்களுக்கு சுற்றுலா சென்று உள்ளனர். அடிக்கடி லிப் கிஸ் அடித்துக்கொண்டும் நீச்சல் உடையிலும் பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

சமீபத்தில் கியான் எனும் ஆண் குழந்தையை பெற்றெடுத்த இந்த நட்சத்திர தம்பதியினர் குழந்தை பிறப்பதற்கு முன்னதாக தாங்கள் எந்தெந்த இடங்களுக்கெல்லாம் சென்று ரொமான்ஸ் செய்தார்களோ அதே இடங்களுக்கு தங்களது மகனையும் கூட்டிக்கொண்டு அதே போன்று போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: என்னது லீக் ஆகுதா?.. எங்க பார்க்கச் சொன்ன அசோக் செல்வன் எங்க பார்க்குறாரு பாருங்க.. மானம் போச்சே!

எஸ் எஸ் மியூசிக் விஜேவாக இருந்த பூஜா ராமச்சந்திரன் அதே எஸ் எஸ் மியூசிக்கில் விஜே வாக இருந்த கிரேய்க் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும், பல ஆண்டுகளிலேயே குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளாமல் பிரிந்து விட்டனர்.

வீரம், பாகுபலி, கே ஜி எஃப், சார்பட்டா பரம்பரை, துணிவு உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ஜான் கொக்கன் சில ஆண்டுகளுக்கு முன்னதாக பூஜாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சுற்றுலா விரும்பியான இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்த புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாகி வந்தனர்.

இதையும் படிங்க:  சினிமாவில் செய்த தவறால் மனைவியின் தாலியை விற்ற டி.ஆர்.மகாலிங்கம்!.. அட கொடுமையே!..

இந்நிலையில், தற்போது மகன் கியான் உடன் மீண்டும் அதே இடங்களுக்கு சுற்றுலா செய்து வருகின்றனர். மகனை கையில் வைத்துக்கொண்டு அம்மாவும் அப்பாவும் லிப் கிஸ் அடிக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஏடாகூடமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.