அஜித்துடன் சேர்வது தான் என் வாழ்நாள் கனவு.... பிரபல நடிகை ஓப்பன் டாக்....!
ஒரு சமயத்தில் கோலிவுட்டின் காதல் மன்னனாக வலம் வந்தவர் என்றால் அது நடிகர் அஜித் தான். அவரின் அழகில் மயங்காத நடிகைகளே கிடையாது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னும் அஜித்துக்கு அந்த மார்க்கெட் குறையவே இல்லை. இன்றும் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க பலர் போட்டி போட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவர் அஜித்துடன் சேர்ந்து நடிப்பது தான் என் வாழ்க்கை லட்சியம் என்று கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல கன்னட சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் ஹர்ஷிகா பூனாச்சா தான். இவர் கடந்த 2008ஆம் ஆண்டில் பியூசி என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
மேலும் சமீபத்தில் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமாருடன் நடிகை ஹர்ஷிகா ஜாக்கி படத்திலும் நடித்துள்ளார். கன்னட நடிகையான இவர் தமிழ் நடிகரான அஜித்தின் தீவிர ரசிகையாம். பல இடங்களில் அஜித் குறித்து மிகவும் பெருமையாக பேசியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசிய நடிகை ஹர்ஷிகா கூறியதாவது, "அஜித் என்ற பெயரிலேயே ஒரு பவர் இருக்கிறது. அவருடன் சேர்ந்து நடிப்பது என்னுடைய வாழ்நாள் கனவாக உள்ளது. அந்த கனவு எப்பொழுது நிறைவேறும் என்று காத்திருக்கிறேன்.
ஆனால் அது எப்பொழுது நடக்கும் என்பது தெரியவில்லை. என்னை அவருடன் நடிக்க வைக்கப் போகும் இயக்குனர் யார் என்பதும் எனக்கு தெரியவில்லை. இதுவரை கனவு நிறைவேற சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை. ஆனால், கட்டாயம் என்னுடைய கனவு நிறைவேறும் என்று எனக்கு தெரியும்" என கூறியுள்ளார். அஜித்தோட வெறித்தனமான ரசிகையா இருப்பாரு போல.