‘ஜோஷ்வா’ படத்தில் நடித்த நடிகை இந்த நடிகரின் மனைவியா? என்ன gvm இதெல்லாம் என்னனு சொல்றது

by Rohini |
joshwa
X

joshwa

Joshva: கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது ஜோஷ்வா திரைப்படம். இந்தப் படத்தை ஐசரி கணேஷ்தான் தயாரித்து வெளியிட்டார். படத்தில் ஐசரி கணேசனின் மருமகன் வருண் நடித்திருக்கிறார். இதற்கு முன் ஒரு சில படங்களில் வருண் நடித்திருந்தாலும் இந்த படத்தில்தான் ஹீரோவாக அறிமுகமாயிருக்கிறார்.

அதுவும் பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் மக்களை கவர்ந்தார் வருண். ஜோஷ்வா படம் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்பாகவே எடுக்கப்பட்ட படமாம். இந்தப் படத்தில் வருணுக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு திருமணமாகி இரு குழந்தைகளும் பிறந்து விட்டன.

இதையும் படிங்க: விஜயகாந்த் கொடுத்த ஐடியா… சத்யராஜ் அடித்த லூட்டி… இதுக்குப் பேருதான் லொள்ளா?..

அதன் பிறகே இந்தப் படம் வெளியாகியிருக்கிறது. இதை வைத்து கௌதம் மேனனை அனைவரும் கலாய்த்து வருகின்றனர். ஹீரோயினாக நடித்த நடிகைக்கு இப்போது இரு குழந்தைகள். படமே இப்போதுதான் வெளியாகிறதா? கௌதம் மேனனின் படங்களே இப்படித்தானா? துருவ நட்சத்திரம் படமும் கிட்டத்தட்ட 5 வருடமாக ப்ரடக்‌ஷனிலேயே இருக்கிறது. ஆனாலும் இன்னும் அந்தப் படம் வெளிவரவில்லை.

என்ன கௌதம் உங்களுக்கு வந்த சோதனை? என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். ஜோஷ்வா படத்தில் வருணுக்கு ஜோடியாக நடித்த நடிகையின் பெயர் ராஹி. இவர் நடிகர் ஆரவ்வின் மனைவியாம். ஆரவ்வும் பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர், இப்போது ஆரவ் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அப்பா ‘அன்பே சிவம்’ படம் ஓடாது!.. துள்ளிக் குதித்த இயக்குனர்!.. சுந்தர்.சி சொன்ன சோகக்கதை!..

ஜோஷ்வா படத்தில் நடிக்கும் போதுதான் ஆரவ்விற்கும் ராஹிக்கும் திருமணம் நடந்திருக்கிறது. இப்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் ஆனபிறகு ஜோஷ்வா படம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது.

aarav

aarav

கொரானா காலகட்டத்தில் நடந்த இவர்களது திருமணத்திற்கு திரையுலகை சார்ந்த சிலரும் உறவினர்களும் கலந்துகொண்டனர். இப்போது இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவர்களது புகைப்படம் தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தில் ராஹியை பார்க்கும் போது இவரா ஜோஷ்வா படத்தின் ஹீரோயின் என நம்ப முடியாத அளவில் இருக்கிறார்.

இதையும் படிங்க: அதானே திருந்திட்டா எப்படி? அதெல்லாம் நடக்காது… சபரிமலை ட்ரிப்பில் ரஜினி செய்த காமெடி

Next Story