விஜய்யை பின்னால் இருந்து இயக்குவது இந்த தேசிய கட்சிதான்- பகீர் கிளப்பும் பத்திரிக்கையாளர்…
பல வருடங்களாகவே விஜய்யின் அரசியல் நுழைவு குறித்த பேச்சுக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இதற்கான முதல் படியாக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார் விஜய். அதனை தொடர்ந்து சமூக சேவைகளில் தனது மக்கள் இயக்கத்தை ஈடுபட வைத்தார்.
மேலும் தான் நடிக்கும் திரைப்படங்களில் பல அரசியல் கருத்துக்களை பேசி வந்தார். இதனால் பல சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் எழுந்து வந்தன. சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கலை சேர்ந்த மாணவி நந்தினியை விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் நேரில் சென்று சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.
அதே போல் வருகிற 17 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் தொகுதி வாரியாக இந்த ஆண்டு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ/மாணவிகளுக்கு விஜய் தனது கையால் சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கி கௌரவப்படுத்த உள்ளார். தற்போது இந்த செய்திதான் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விஜய் இவ்வாறு மாணவ/மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை பார்க்கும்போது விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கியுள்ளதாக தெரிய வருகிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், “ஒருவர் அரசியலுக்கு வந்தால் பெரிய செலவுகளில் இழுத்துவிடும். விஜய் அரசியலுக்குள் வந்தால் இந்த செலவுகளை விஜய் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது குறித்து தெரியவில்லை. விஜய்க்கு கைக்கொடுப்பதற்காக யாராவது பின்னணியில் இருக்கிறார்களா என்று எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. யாரோ விஜய்யை பின்னால் இருந்து இயக்குகிறார்கள், அது ஒருவரா? இல்லை ஒரு கட்சியா? என்று சந்தேகங்கள் இருக்கிறது.
வெளிப்படையாக சொல்லப்போனால் விஜய்க்கு பின்னால் பிஜேபி இருக்கிறதா என்ற சந்தேகம் கூட இருக்கிறது. இன்றைக்கு இருக்கிற திராவிட கட்சிகளின் வழுவை குறைக்க வேண்டும் என்றால் மூன்றாவதாக ஒரு சக்தியை வளர்த்துவிட வேண்டும். அது வளர்ந்த பிறகு அதனுடன் சேர்ந்து ஒட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக பிஜேபிக்கு இருக்கும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இவ்வளவு நடிச்சும் செந்திலுக்கு இருந்த நிறைவேறாத ஆசை!.. நிறைவேற்றிய மகன்கள்…