இதக்கூடவா அஜித் சரியா கேட்க மாட்டாரு?.. அந்தப் படமும் திருட்டு கதையா?.. பொங்கிய பிஸ்மி..

by ramya suresh |
bismi
X

bismi

நடிகர் அஜித் தனது படங்களின் கதையை சரியாக இயக்குனர்களிடம் கேட்பதில்லை என்று சினிமா விமர்சகர் பிஸ்மி தெரிவித்திருக்கின்றார்.

நடிகர் அஜித்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். நடிகர் அஜித் கடைசியாக துணிவு என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக அஜித்தின் எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: ஒரே விவாகரத்தா இருக்கு!. கல்யாணம்னாலே பயம்!.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபீலிங்!…

விடாமுயற்சி:

துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. இயக்குனர் மகிழ்திருமேனி இந்த திரைப்படத்தை கடந்த 2 வருடங்களாக எடுத்து வருகின்றார். முதலில் அஜர்பைஜானில் இப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்தது.

vidamuyarchi

vidamuyarchi

அங்கு ஏற்பட காலசூழ்நிலை காரணமாக தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. ஒரு வழியாக படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் ஒரு பாடல் மட்டுமே மீதம் இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

ஹாலிவுட் தரத்திற்கு இந்த திரைப்படம் இருப்பதாக ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இன்று நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கி விட்டதாகவும், கட்டாயம் இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்றும் கூறப்படுகின்றது.

கதை திருட்டு சர்ச்சை:

விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்கின்ற திரைப்படத்தின் தழுவல் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்படத்தின் காப்பி ரைட்ஸ் உரிமையை லைக்கா நிறுவனம் இன்னும் வாங்காமல் படத்தை முழுவதுமாக இயக்கி இருப்பதாகவும், இதனால் பிரேக் டவுன் படக்குழுவினர் 150 கோடி நஷ்ட ஈடு கேட்டு விடாமுயற்சி படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

பிஸ்மி விளக்கம்:

விடாமுயற்சி படத்தின் கதை திருட்டு குறித்து தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பிஸ்மி பேட்டி கொடுத்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: ' விடாமுயற்சி திரைப்படத்தை முழுவதுமாக எடுத்து முடித்து விட்டார்கள். கதை கேட்கும் போது இந்த திரைப்படம் உண்மையில் உங்களின் சொந்த கதைதானா அல்லது வேறு படத்தின் காப்பியா என்று நடிகர் அஜித் கட்டாயம் கேட்டிருக்க வேண்டும்.

vidamuyarchi

vidamuyarchi

அப்படி கேட்டிருந்தால் அதற்கு சரியான உரிமை வாங்கி இருக்கிறீர்களா? என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். இதில் கூட நடிகர் அஜித் கவனம் செலுத்தாமல் இருந்தால் எப்படி? தற்போது விடாமுயற்சி படத்திற்கும், அவருக்கும் ஒரு அவப்பெயர் வரும்போது அதனை சரி செய்ய வேண்டிய பொறுப்பு நடிகர் அஜித்துக்கும் இருக்கின்றது.

இதையும் படிங்க: அமரன் வெற்றியால் ஆட்டம் போடும் எஸ்கே!.. ஓவர் தலைக்கனமா?.. வெளுத்து வாங்கிய பிரபலம்!..

இந்த திரைப்படம் மட்டுமல்ல அவரின் ஏகப்பட்ட திரைப்படங்கள் ஹாலிவுட் திரைப்படங்களின் தழுவல் தான். ஏன் வரும் குட் பேட் அக்லி திரைப்படமும் ஒரு ஆங்கிலத் திரைப்படத்தின் ரீமேக். அதற்காகவாவது ஒழுங்காக காப்பிரைட்ஸ் வாங்கி வைத்திருக்கிறார்களா? என்பது தெரியவில்லை' என்று அவர் கூறியிருக்கின்றார்.

Next Story