“உதயநிதி நடிக்காமல் போனது கமல்ஹாசனுக்கு நிம்மதிதான்!!”… இவ்வளவு ஓப்பனாவா பேசுறது??

by Arun Prasad |
Kamal Haasan and Udhayanidhi
X

Kamal Haasan and Udhayanidhi

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தயாரிப்பாளராக திகழ்ந்து வந்த உதயநிதி ஸ்டாலின் “ஓகே ஓகே”, “கதிர்வேலன் காதல்”, “சைக்கோ” போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்தார். உதயநிதி ஸ்டாலின் நடிக்க வந்த புதிதில் ஒரு பேட்டியில் தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என கூறினார்.

ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதியில் நின்று அமோக வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், சில நாட்களுக்கு முன்பு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில் “மாமன்னன் திரைப்படமே எனது கடைசி திரைப்படம். இனிமேல் சினிமாக்களில் நடிக்கப்போவதில்லை” என கூறினார். மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த திரைப்படத்தில் இருந்து விலகிக்கொண்டதாகவும் கூறினார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி இது குறித்து மிகவும் வெளிப்படையான ஒரு கருத்தை கூறியுள்ளார்.

Kamal Haasan

Kamal Haasan

“உதயநிதி தனது திரைப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார் என்பது கமல்ஹாசனுக்கு சந்தோஷமான ஒன்றாகத்தான் இருந்துருக்கும். என்ன காரணம் என்றால், உதயநிதி ஸ்டாலின் நடித்த ஓகே ஓகே திரைப்படத்தை தவிர மற்ற எந்த திரைப்படமும் அவ்வளவாக ஹிட் அடிக்கவில்லை.

உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கலகத்தலைவன் திரைப்படம் கூட அவ்வளவாக வசூல் ஆகவில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில் உதயநிதியை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என கூறமுடியாது. சொல்லப்போனால் தயாரிப்பாளரான கமல்ஹாசனுக்கு ஒரு வகையில் நஷ்டத்தை கொடுக்கும் படமாக கூட இருக்கலாம்” என பிஸ்மி அப்பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: சிபி சக்ரவர்த்தியை ஓரமாக உட்காரவைத்த ரஜினி… லவ் டூடே இயக்குனருக்கு பச்சை கொடியா??… இது என்னப்பா புது டிவிஸ்ட்டா இருக்கு..

Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

மேலும் பேசிய அவர் “உதயநிதி பெரிய நடிகர் என்றோ, அவரை வைத்து தயாரித்தால் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருமை என்ற எண்ணத்திலோ கமல்ஹாசன் உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கவில்லை . உதயநிதி தமிழ்சினிமாவின் முக்கிய சக்தியாக இருக்கிறார். ஆதலால் அவருடைய தயவு தனக்கு தேவை என்ற ஒரே காரணத்திற்காகத்தான் கமல்ஹாசன் உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கினார்” எனவும் அப்பேட்டியில் பிஸ்மி மிகவும் வெளிப்படையாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story