பிரைவசி வேண்டும்னா எதுக்கு கல்யாணம் பண்றீங்க!.. ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவகாரம்.. பிரபலம் சுளீர்!

Published on: May 23, 2024
---Advertisement---

பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து குறித்து தனது கருத்தை காரசாரமாக யூடியூப் வீடியோவில் பேசியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா. சினிமாவில் கேரவன் என்ற ஒன்று வந்த பின்னர் நடிகர்கள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறிக் கொண்டு போகிறது என பேசியுள்ளார்.

தங்கள் விவகாரம் தொடர்பாக எதுவும் பேசக் கூடாது தங்களுக்கு பிரைவசி வேண்டும் என ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி சொல்கின்றனர். பிரைவசி வேண்டும் என்றால் ஏன் திருமணம் செய்கிறீர்கள் என்றும் திருமணத்தை முறித்துக் கொள்ளும் நீங்கள் அதை பிரைவேட்டாக செய்ய வேண்டியது தானே அதை ஏன் சோஷியல் மீடியாவில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என பதிவிடுறீங்க, அப்படி சொல்வதால் தானே அனைவரும் அதுகுறித்து பேசுறாங்க என வெளுத்து வாங்கியுள்ளார்.

இதையும் படிங்க: தைரியம் இருந்தா விஜய் இத பண்ணட்டும்! தளபதிக்கு சவால் விடுக்கும் பிரபலம்

ஜிவி பிரகாஷ் நடித்த பல படங்கள் பிட்டு படங்கள் தான் என்றும் அவருக்கு பல்வேறு நடிகைகளுடன் தொடர்பு உள்ளதாகவும் அதை தட்டி கேட்ட சைந்தவி விட்டுப் பிரிந்துவிட்டார் இதுதான் தனக்கு கிடைத்த தகவல் என பகீர் கிளப்பியுள்ளார் சேகுவாரா.

ஜிவி பிரகாஷ் விவாகரத்துக்கும் நடிகர் தனுஷ் தான் காரணம் என ஐஎஸ்ஐ முத்திரையை பலர் குத்தி விட்டனர். அந்தளவுக்கு சினிமாவில் ஹீரோவாக இருக்கும் தனுஷ் நிஜத்தில் வில்லனாக இருக்கிறாரா? சினிமாவில் அவர் பற்றி இத்தனை பேச்சுக்கள் பகிரங்கமாக வருகிறதே என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: நான் சரக்கடிக்கறத நிறுத்த காரணமே அவர்தான்!.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே ராதாரவி!..

பாடகி சுசித்ரா தனுஷ் குறித்து படுமோசமாக பேச காரணமே அவருக்கு பல விஷயங்கள் தெரிந்திருப்பது தான் என்றும் அப்போது அவரை பைத்தியக்காரி எனக் கூறி பலியாடு ஆக்கி விட்டனர். பல வருடங்கள் தன் வாழ்க்கையே போன டென்ஷனில் தான் தற்போது மீண்டும் அவர் இது பற்றி பேசி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.