Cinema History
ராஜ்கிரணுக்கு இப்படியொரு முகமா?.. ரஜினியையே அந்த விஷயத்தில் வீழ்த்தினாரா?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
ஆரம்பத்தில் தியேட்டர்களில் வரும் ரீல் பெட்டிகள் சரியாக இருக்கிறதா? சரியான இடங்களுக்கு அந்த ரீல் பெட்டிகள் செல்கிறதா? தியேட்டர்களில் டிக்கெட்டுக்கும் மேல் திருட்டுத் தனமாக வந்து அமரும் கோஷ்டிகளை அடித்து விரட்டுவது உள்ளிட்ட வேலைகளை தான் ராஜ்கிரண் பார்த்து வந்திருக்கிறார்.
அதன் பின்னர் சினிமா பைனான்ஸியராக மாறிய ராஜ்கிரண் சென்னைக்கு சென்று தயாரிப்பாளராக மாறலாம் என்கிற நோக்கத்துடன் தனது அலுவலகத்தில் வேலை செய்து வந்த வடிவேலுவை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: சும்மா இருந்தாலும் சொறிஞ்சு விடுறாங்களே!.. விஜய் ரசிகர்களை விடாமல் வம்பிழுக்கும் ரஜினி ஃபேன்ஸ்!..
தயாரிப்பாளராக ஆகலாம் என நினைத்த ராஜ்கிரணுக்கு சகட யோகம் இருக்கிறது என ஜோஷியர் ஒருவர் சொல்ல, தனது நண்பர் பத்திரிகையாளர் ஒருவர் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார். ராஜ்கிரண் ஹீரோவானதை அறிந்ததும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை பார்த்து விட்டு ஏவிஎம் நிறுவனம், சத்யஜோதி நிறுவனம், கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்ட பலர் ரஜினிகாந்துக்கு 60 லட்சம் சம்பளம் தருகிறோம். நீங்க நடிச்சா 80 லட்சம் சம்பளம் தருகிறோம் என அழைத்திருக்கின்றனர்.
ஆனால், அதையெல்லாம் விட்டு விட்டு சொந்தமாகவே படம் தயாரித்து நடிக்கிறேன் என முடிவு செய்த ராஜ்கிரண் தயாரித்து எடுத்த படம் படுதோல்வியை சந்திக்க அதன் பின்னர் தயாரிக்கப் போவதே இல்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம்.
இதையும் படிங்க: இது கண்ட்ரோல் இருக்கவங்களுக்கு மட்டும்!.. டைட் உடையில் நச்சுன்னு காட்டி ஜில்லாக்கும் யாஷிகா…
தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தான் என் ராசாவின் மனசிலே படத்தை இயக்கியது போல வெளியுலகத்துக்கு தெரிந்தாலும் அந்த படத்தை இயக்கியதே ராஜ்கிரண் தான் என பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் ராஜ்கிரணின் இன்னொரு முகத்தை புட்டு புட்டு வைத்திருக்கிறார். ராஜ்கிரண் மூலமாக சென்னைக்கு வந்த வடிவேலு அதன் பின்னர் வளர்ந்து மிகப்பெரியளவுக்கு உயர்ந்து விட்டார் என்றும் ராஜ்கிரண் தேய்ந்து விட்டார் என்றும் கூறியுள்ளார்.