Cinema News
பெண்கள், ஆண்களை ஏமாற்றிய ப்ளேபாய் – விக்ரமன் பற்றி பத்திரிக்கையாளர் ஆவேசப்பேட்டி
முதலில் நெறியாளராக இருந்து அதன் பின் பிக்பாஸ் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டவர் விக்ரமன். இப்போது இவர் மீது கிருபாமுசாமி என்பவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் என்னைப் போல ஒரு 15 பெண்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்றும் விக்ரமன் மீது தொடர்ந்து புகார்களை கூறியிருக்கிறார். இதை பற்றி பிரபல பத்திரிக்கையாளர் பாண்டியன் பெண்களை மட்டுமில்லாமல் ஆண்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். பல பேரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தராமல் விக்ரமன் ஏமாற்றி வருவதாகவும் கூறியிருக்கிறார்.
அரசியலுக்குள் நுழைந்து விட்டாலே அதுவும் சினிமாவில் இருந்து ஒருவர் அரசியலுக்குள் வந்துவிட்டாலே அவர் அரசியலுக்கும் லாயிக்கில்லை, சினிமாவிற்கும் லாயிக்கில்லை. ஒரு ப்ளே பாய். இவர்கள் மிகவும் கட்டுப்படுத்தமுடியாத ஒரு மட்டமான மனிதர்களாகத்தான் இருக்க முடியும். அவர்களுக்கு பகலில் ஒரு முகமாகவும் இரவினில் ஒரு முகமாகவும் தான் இருப்பார்கள் என்று சினிமாவையும் சினிமா சார்ந்த அரசியலையும் பற்றி பாண்டியன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
மேலும் கூறிய பாண்டியன் இவர்களுக்கு என்று லட்சியமோ எதுவுமோ இருக்காது. சினிமா அரசியல் சார்ந்த இவர்களை கோடம்பாக்கத்து கழிசடைதான் என்று சொல்லவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மொத்தத்தில் திரைப்படத்துறையை சார்ந்தவர்களையும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவோரையும் ஒட்டுமொத்தமாக கழிசடை என்று சொல்லும் பாண்டியன் விக்ரமன் இந்தளவுக்கு பேசுபொருளாக மாறப்பட்டதற்கு காரணம் அவர் விடுதலை சிறுத்தை இயக்கத்தில் இருந்தததனால் தான் என்று கூறினார்.
இதையும் படிங்க : ரியல் ப்ளே பாயாக இருந்த டாப் 5 நடிகர்கள் – அப்பவே ஆட்டம் போட்ட ஜெமினிகணேசன்
‘அந்த இயக்கம் தலித் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற சமயத்தில் இப்படி ஒரு மனுஷனை திருமாவளவன் வைத்திருந்தது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக பார்க்கிறேன், மேலும் அந்த கிருபா முனுசாமி நேரடியாக திருமாவளவனிடமே விக்ரமனை பற்றி புகாரை அளித்திருக்கிறார். ஆனால் திருமாவளவன் தன்னை ஒன்றும் செய்யமாட்டார் என்று எண்ணியிருந்த விக்ரமனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏனெனில் இதையெல்லாம் விசாரித்த திருமாவளவன் உண்மை என்று தெரிந்ததும் விக்ரமனுடன் இருந்த உறவை துண்டித்துக் கொண்டார். இதனால் கடுப்பில் விக்ரமன் ‘இதுவரை ஒரு முதுகெலும்பில்லாத தலைவனுடன் தான் இருந்திருக்கிறேன்’ என்று திருமாவளவன் மீதே குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இதுவே ஒரு மட்டமான செயல்’ என்று பத்திரிக்கையாளர் பாண்டியன் கூறினார்.
மேலும் கூறிய பாண்டியன் ‘விசாரித்ததோடு முடித்துக் கொண்ட திருமாவளவன் விக்ரமன் மீது இதுவரைக்கும் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே கிருபா முனுசாமி விக்ரமன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தால் இந்நேரம் விக்ரமன் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு ரிமாண்டு செய்திருப்பார்கள். நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டம் நடத்தியிருப்பார்கள், விக்ரமன் மாதிரி ஏகப்பட்ட பேர் அரசியலுக்குள் ஒழிந்திருக்கிறார்கள். ஆகவே விரைவில் விக்ரமன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பலமான அரசியல் பின்னனியில் விக்ரமன் இருப்பதால்தான் அவர் மீது விசாரணை நடத்த அனைவரும் பயப்படுகிறார்கள்.
இதை பயன்படுத்திக் கொண்டு விக்ரமனும் தொடர்ந்து பல குற்றங்களை செய்து கொண்டு வருகிறார். ஆகவே அந்த கட்சியை சார்ந்த தலைவர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்’ என பாண்டியன் கூறினார். மேலும் விக்ரமன் இப்பொழுது அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி இரண்டிலும் பிரபலமாகிவிட்டார். அதனாலேயே இன்னும் அவரின் ஆட்டம் அதிகமாகத்தான் இருக்கும். சீக்கிரம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாண்டியன் கூறினார்.
இதையும் படிங்க : சரக்கு பாட்டிலுடன் கோமாளி பட நடிகை.. கன்னா பின்னா உடையில் தாறுமாறு கவர்ச்சி வேற!