நானும் சூர்யாவும் ரெடி.. பெண் இயக்குனர்களுக்கு தில்லாக சவால் விட்ட ஜோதிகா

Published on: April 13, 2024
surya
---Advertisement---

Actress Jyothika: தமிழ் சினிமாவில் 2000 ஆண்டுகளில் ஒரு டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜோதிகா தொடர்ந்து தமிழ் நாட்டின் கனவுக்கன்னியாக மாறினார். அவருக்கு தமிழில் மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம். அந்தப் படத்தில் துருதுருவென நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் ஜோதிகா.

நடிப்பில் எப்போதுமே ஒரு சுறுசுறுப்பு இருக்கும். ஆரம்பகாலங்களில் தமிழ் அறவே பேச தெரியாமல் சிரமப்பட்ட ஜோதிகா இப்போது பிச்சு உதறுகிறார். தமிழ் நாட்டின் செல்ல மருமகளாகவே மாறினார். திருமணம், குழந்தைகள் , குடும்பம் என தன் முழு நேரத்தையும் செலவழித்து வந்த ஜோதிகா இப்போது தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் நழுவ விட்ட முக்கிய படங்கள்!.. அந்த கதையில் நடிச்சதால வாழ்க்கையே மாறிய பிரபலங்கள்…

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், ஹிந்தியிலும் பிஸியாக இருக்கிறார். ஹிந்தியில் படங்களில் நடிக்க ஜோதிகாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் குடும்பத்துடன் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். சூர்யாவையும் ஹிந்தியில் அறிமுகப்படுத்த உள்ளார்.

பல படங்களை தயாரிக்கவும் முனைப்பு காட்டி வருகிறார். இந்த நிலையில் ஜோதிகாவின் ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 16 வருடங்களில் ரொமாண்டிக் என்ற பெயரில் படங்களில் வெறும் சபலம் மட்டுமே இருக்கிறது. ரொமான்ஸ் என்பதே இல்லை. என்னையும் சூர்யாவையும் வைத்து ரொமாண்டிக் படம் எடுக்க பல பெண் இயக்குனர்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஓடியாங்க.. ஓடியாங்க!.. ஊர்வசி நடித்து மிரட்டிய ஜே பேபி!.. எந்த ஓடிடியில் வந்துருக்குன்னு பாருங்க!..

சூர்யா ஜோதிகா இணைந்து நடித்த அனைத்து படங்களுமே ரொமாண்டிக் படங்களாகவே அமைந்திருக்கும். அதில் ஜோதிகா சொல்வதை போன்று பார்க்கும் போது சபலத்தை தூண்டாது. அந்த மாதிரியான கதைகள் இப்போது குறைந்து வருகின்றது என கூறியிருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.