Cinema History
சந்திரமுகியாக நான் தான் நடிக்க வேண்டியது… நல்ல வேலை நடக்கல…! நடந்தா நொந்து இருப்போம்ல..!
Chandramukhi: சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்தும், ஜோதிகா நடித்த நடிப்புக்கு ஈடே இல்லை. அந்த அளவுக்கு இருவரும் பின்னி பெடல் எடுத்து இருப்பார்கள். ஜோதிகா தேசிய விருது நாமினியில் கூட இடம் பெற்றார். தற்போது நடிகை ஒருவர் என்னை தான் அந்த பாத்திரத்தில் கேட்டார்கள் எனக் கூறி இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
பி.வாசு இயக்கத்தில் உருவான படம் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, வடிவேலு, நாசர், பிரபு, ஜோதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மலையாளப் படமான மணிசித்ரதாழுவின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவானது.வித்யாசாகர் இப்படத்தின் இசையமைப்பை செய்தார்.
இதையும் படிங்க: நடிக்கிறதை விட்டுட்டு இந்த தொழில் செய்யப் போறாரா வலிமை பட நடிகை?.. அவரே போட்ட போஸ்ட்டை பாருங்க!..
சந்திரமுகி படத்தை பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம்குமார் ஆகியோர் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தனர். மேலும் இது அந்நிறுவனத்தின் 50வது படமாகும். இப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரையரங்கில் 890 நாட்கள் ஓடி பெரும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது.
இப்படம் ஐந்து தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், நான்கு பிலிம்ஸ் ஃபேன்ஸ் அசோசியேஷன் விருதுகள் மற்றும் இரண்டு பிலிம்பேர் விருதுகளை வென்றது. இப்படத்தில் நடித்ததற்காக ஜோதிகா மற்றும் வடிவேலு இருவருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: எனக்கு தான் வேணும்… தொடர்ந்து அடம் பிடிக்கும் கணேஷ் மற்றும் மாலினி…!
கங்கா மற்றும் சந்திரமுகியாக நடிக்க, பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். கடைசியில் இந்த கேரக்டருக்கு ஜோதிகா தேர்வானார். 50 நாட்கள் இந்த படத்துக்காக கால்ஷூட் கொடுத்தார். மணிச்சித்திரத்தாழில் ஷோபனாவினை காப்பி அடிக்காமல் ஜோதிகா ஸ்டைலில் நடிக்க வைத்தார் வாசு. ஆனால் இந்த கேரக்டரில் தான் நான் நடிக்க இருந்தது என சினேகா தற்போது தெரிவித்து இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு பேட்டியில் நீங்க மிஸ் பண்ண பெஸ்ட் படம் எதுனு கேள்வி கேட்கப்பட்டது. நான் தான் சந்திரமுகியாக நடிக்க வேண்டியது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது தவறிவிட்டது என்றார். இதைகேட்ட பலரும் நல்ல வேலை நீங்க நடிச்சா. இப்போ கங்கனா மாதிரி உங்களையும் கலாய்ச்சிருப்பாங்க என பலரும் நக்கல் அடித்து வருகின்றனர்.