தளபதி 68-ல் அந்த நடிகை டவுட்தானாம்!.. என்னடா இப்படி டிவிஸ்ட் வைக்கிறீங்க!..

வாரிசு படத்திற்கு பின் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தை காண விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

விரைவில் இப்படத்தின் முன்பதிவும் துவங்கவுள்ளது. இப்போதே பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்படத்திற்கு மொத்தமாக டிக்கெட் வேண்டும் என கேட்டிருப்பதாக வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒருபக்கம், விஜய் ஜாலியாக ஊர் சுற்ற போனார். நார்வே, லண்டன் ஆகிய நாடுகளுக்கு சென்றார்.

இதையும் படிங்க: சின்ன மீனை போட்டு பெரிய மீனை புடிக்கும் லைக்கா!.. விஜய் மகன் இயக்குனர் ஆனதன் பின்னணி!..

லியோ படத்திற்கு பின் மாநாடு பட இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் இரட்டை வேடம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக புதிய தொழில் நுட்பத்திற்காக விஜய், வெங்கட்பிரபு ஆகியோர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளனர்.

ஒருபக்கம், அப்பா விஜய்க்கு ஜோதிகா ஜோடி எனவும், மகன் விஜய்க்கு பிரியங்கா மோகன் ஜோடி எனவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதோடு, விஜயின் தம்பியாக நடிகர் ஜெய் நடிக்கிறார் எனவும் சொல்லப்பட்டது. அதை விட முக்கியமாக இப்படத்தில் விஜய் ஒரு ரா ஏஜெண்டாக நடிக்கிறார் எனவும் செய்திகள் கசிந்துள்ளது.

இதையும் படிங்க: அடுத்த சூப்பர்ஸ்டார் இல்லைங்க!.. அடுத்த உலக நாயகனாகவே ஆகப் போகும் விஜய்!.. விளங்குமா?..

இந்நிலையில், இப்படத்தில் ஜோதிகா நடிப்பதில் 100 சதவீதம் உண்மையில்லை. வேறு ஒரு நடிகையை தேடி வருகிறார்கள். அவர் கிடைக்கவில்லை எனில் ஜோதிகா நடிப்பார் என தற்போது செய்திகள் கசிந்துள்ளது. அதேநேரம், மகன் விஜய்க்கு பிரியங்கா மோகன் நடிப்பது 99 சதவீதம் உண்மை என சொல்லப்படுகிறது.

ஜோதிகா ஏற்கனவே விஜயுடன் குஷி, திருமலை என இரண்டு படங்களில் நடித்திருந்தார். இரண்டு படமுமே சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, ஹிட் கூட்டணி மீண்டும் இணையுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: உலகமே கொண்டாடிய சம்பவம்! மௌனம் காத்த விஜய் – அதுக்கு இவர் சரிப்பட்டு வருவாரா?…

 

Related Articles

Next Story