ஜோதிகா நடித்த முதல் தமிழ் படம் எது தெரியுமா?.. சத்தியமா ‘வாலி’ இல்லைங்க.. பல கோடி பட்ஜெட்டில் எடுத்த படமாம்...
தமிழ் சினிமாவில் 2000 ஆவது ஆண்டுகளில் தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஜோதிகா. க்யூட்டான முகபாவனை மூலம் ரசிகர்களை மிக எளிதாக கவர்ந்தார் ஜோதிகா. மும்பையில் இருந்து வந்து தமிழே தெரியாமல் இன்று தமிழ் நாட்டின் மருமகளாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்த ஜோதிகா முதலில் அறிமுகமான படம் ஹிந்தியில் தான். அதன் பின் வாலி படத்தில் தான் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். ஆனால் வாலி படத்திற்கு முன்னாடியே ஜோதிகாவை கோடீஸ்வரன் என்ற படத்திற்காக கமிட் செய்திருக்கிறார் இயக்குனர் நந்தகுமார்.
இதையும் படிங்க : “இன்னும் கொஞ்ச நாள்ல லவ் டூடே படத்தை மறந்திடுவாங்க..” என்ன சார் சொல்றீங்க?? சுசீந்திரன் ஓபன் டாக்…
விஜயகாந்தை வைத்து தென்னவன் படத்தை எடுத்த இயக்குனர் தான் நந்தகுமார். இவர் முதலில் உதவி இயக்குனராக தான் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்னரே 3.50 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறாராம் நந்தகுமார்.
பட்ஜெட் அதிகமானதால் அந்த நேரத்தில் ரிச் ஆன தயாரிப்பாளரான குஞ்சுமோன் புரடக்ஷனில் தயாரிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க குஞ்சுமோன் அவரது மகனையே ஹீரோவாக்க ஆசைப்பட்டிருக்கிறார். அவரது ஆசைப்படியே குஞ்சுமோன் மகனை ஹீரோவாக்கி ஹீரோயினை தேடும் படலம் நடந்து கொண்டிருந்ததாம்.
இதையும் படிங்க : நன்றி மறந்த எஸ்.ஏ.சி… மறக்காமல் உதவிய ரஜினி… ஒரு தயாரிப்பாளரின் நெகிழ்ச்சி…
மும்பை அழகிகளை தேடும் நோக்கிலேயே இருந்தவர்கள் முதலில் பிடித்த நடிகை பிரீத்தி ஜிந்தா வாம். ஆனால் அவரை ஏதோ ஒரு காரணத்தால் மறுத்து விட்டனராம். அதன் பிறகு ரீமா சென். ஆனால் அவர் பார்ப்பதற்கு மிகவும் முதிர்ச்சியடைந்தவராக இருந்ததனால் நக்மாவை அணுகியிருக்கின்றனர். ஆனால் நக்மா என் தங்கை ஒருத்தி இருக்கிறாள்.
அவளை வேண்டுமென்றால் முயற்சி செய்யுங்கள் என்று கூறினாராம். அவரை பார்த்ததுமே நந்தகுமாருக்கு மிகவும் பிடித்துப் போக சென்னைக்கு வரவழைத்திருக்கின்றனர். அவரை வைத்து போட்டோ சூட்டுகள் எல்லாம் எடுத்து எல்லாமே சரியாக தான் போய்க் கொண்டிருந்தன. ஆனால் குஞ்சுமோனை சுற்றி இருக்கும் சில பேர் ஜோதிகாவை சில பல காரணத்தால் வேண்டாம் என்று சொல்லிவிட்டனராம். அதனாலேயே அந்த படத்தில் இருந்து ஜோதிகா விலக வேண்டியதாகிவிட்டது. அதன் பிறகே வாலி படத்தில் நடித்திருக்கிறார். மேலும் அந்த கோடீஸ்வரன் படமும் இதுவரை வெளியாகவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது.