நடிகர் மோகன் தனது ஆரம்ப கால சினிமா பயணங்களைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு நினைவு கூர்கிறார். அந்த சுவாரசியமான அனுபவங்களில் பாலசந்தர் மோகனை கண்டபடி திட்டினாராம். வாங்க என்னன்னு பார்ப்போம்.
நான் முதன் முதலாக என்கிட்ட பாலசந்தர் மரோசரித்ரா தமிழ்ல எடுக்கறதா சொன்னாரு. அதுல நடிக்கிறதுக்காக என்னை புக் பண்ணி 2500 ரூபா அட்வான்ஸ்சும் கொடுத்துட்டாரு. கமல்ஹாசன் ரோல் என்னை தமிழ்ல நடிக்க பிக்ஸ் பண்ணிட்டாரு. அதுக்கு ‘அலைகள் எழுதிய கவிதை’ன்னு டைட்டில் போட்டாரு.
இதையும் படிங்க… முதல் நாளிலேயே அடிவாங்கிய மோகன் படம்!.. ’ஹரா’ வசூல் இவ்வளவுதானா?.. அப்போ ’கோட்’ நிலைமை?
அதுக்கு ஹீரோயினும் போட்டாச்சு. அப்போ தெலுங்கு படத்தின் முன்னணி இயக்குனர் பாபு என்னைக் கூப்பிட்டாரு. சுதாகர் நடித்த ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தைத் தெலுங்குல பண்ணலாம்னு சொன்னார். சரின்னு நானும் போயிட்டேன். எஸ்.பி.பி. சார் தான் மியூசிக் டைரக்டர். பாட்டு எல்லாமே சூப்பரா இருக்கும். அந்தப் படத்துக்காக மொட்டை அடிக்க வேண்டியிருந்தது.
அதெல்லாம் முடிச்சிட்டு வர்றேன். அப்புறம் பாலசந்தர் கூப்பிட்டாரு. டிடிகே ரோடுல ஹேமமாலினி வீட்டுப் பக்கத்துல டப்பிங் தியேட்டர் காதம்பரி இருந்துச்சு. அங்க வரேன். பாலசந்தர் அங்கே வந்ததும் மோகனை எங்கேன்னு தேடுறாரு. நான் கும்பல்ல நிக்கிறேன். மொட்டை அடிச்சி மீசை எல்லாம் எடுத்துருக்கேன். ‘என்னடா இத்தனை நாள் ஹீரோவுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்ப என்னடா இப்படி வந்து நிக்கிறேன்னு…’ கெட்ட வார்த்தைல கண்டபடி திட்டுனாரு.
சார் நானும் வழக்கம்போல ‘கிழக்கே போகும் ரயில் சார், தெலுங்கு சார், பாபு சார்’னு ஒவ்வொன்றாக சொல்லி சமாளித்தேன். என்ன சொல்லியும் கன்னாபின்னான்னு திட்டிட்டாரு. ‘என்ன பண்றதுன்னு தெரியல…’ன்னு அனந்து சாரைக் கூப்பிட்டு சொல்றாரு. ‘இவனைத் தவிர வேற யாரையும் வச்சு சூட் பண்ணல..’ன்னு சொல்லிட்டாரு. கடற்கரையில் சூட்டிங்கிறதால எனக்கு முடி வளரட்டும். விக் வைக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு.
இதையும் படிங்க… குட் பேட் அக்லி டீமுக்கு குட்பை!.. மாத்தி மாத்தி மங்காத்தா விளையாடும் அஜித்!.. என்னமோ நடக்குது!..
‘இனிமே என்னைக் கேட்காம எங்கேயாவது சொல்லாம போனேன்னனா கொன்னுடுவேன்…’னு ஜாலியா சொல்லிட்டுப் போயிட்டாரு. அப்போ எனக்கு முடிவளர்ற நேரத்துல ஒரிஜினல் மரோசரித்ரா ரிலீஸ் ஆயிடுச்சு. அது சூப்பர் டூப்பர் ஹிட்டானதும் இங்கே இனிமே இந்தப் படத்தைப் பண்ண வேண்டாம்னு பாலசந்தர் சார் சொல்லிட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…