Categories: latest news

‘மகாநதி’ படத்தை பார்த்த பாலசந்தர் இப்படி ஒரு வார்த்தை சொல்லுவாருனு நினைக்கல!

Mahanadi Movie: தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகனாக இந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளைக் கடந்து இந்த தமிழ் சினிமாவில் இன்றும் தனது முத்திரையை பதித்து வருகிறார் கமல். அவருடைய ஆரம்ப கால படங்களில் இருந்து இப்போது ரிலீஸ் ஆகும் இந்தியன் 2 படம் வரைக்கும் எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு படங்களுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் தான் இருக்கும்.

ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வகையில் வித்தியாசம் காட்டியே நடிப்பவர் கமல்ஹாசன். அதில் மகாநதி படம் யாராலும் மறக்க முடியாத படம். எத்தனை முறை பார்த்தாலும் போர் அடிக்காத வகையில் அதனுடைய கதைக்களம் மிகவும் சுவாரசியமாக அமைந்திருக்கும். அந்த படத்தில் உள்ள இயல்பு தன்மையும் ஒரு சராசரி மனிதனின் உணர்வுகளையும் தன்னுடைய நடிப்பின் மூலம் அழகாக காட்டியிருப்பார் கமல்.

இதையும் படிங்க: கவுண்டமணியுடன் 35 ஆண்டுகாலமாக தொடர்ந்து பணியாற்றும் இயக்குனர்… அட இவரா?

1994 ஆம் ஆண்டு வெளியான இந்த மகாநதி திரைப்படத்தை சந்தான பாரதி இயக்கியிருப்பார். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை எந்த அளவு புரட்டிப் போடுகிறது என்பதையும் இந்த படத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக தன் மகள் தெரியாமல் ஒரு தப்பான இடத்தில் மாட்டிக் கொள்ள அதிலிருந்து அவளை மீட்க ஒரு தந்தையாக கமல் போராடும் போராட்டத்தை பார்க்கும் பொழுது ஒவ்வொரு மனிதனின் மனமும் கலங்கத்தான் செய்யும்.

அதையும் அவருடைய நடிப்பின் மூலம் அழகாக காட்டியிருப்பார் கமல் .இந்த நிலையில் மகாநதி படத்தை பார்த்துவிட்டு அந்த காலத்தில் பாலச்சந்தர் கமலுக்கு ஒரு கடிதத்தை எழுதினாராம். அந்த கடிதத்தில்  ‘என்னை நீ குருநாதர் என்பாய். இப்போது நீ இந்த தமிழ் திரை உலகுக்கு குருநாதர் ஆகிவிட்டாய்’ என பாராட்டி எழுதினாராம். அந்த கடிதத்தை கமல் இன்னும் பத்திரமாக வைத்திருப்பதாக ஒரு செய்தி இருக்கிறது. இந்த அளவுக்கு பாலச்சந்தர் பாராட்டிய படமாக மகாநதி திரைப்படம் அமைந்தது.

இதையும் படிங்க: சொல்றத மட்டும் செய்! வாய கொடுத்து மாட்டிக்கிட்ட அஜித்.. கோபத்தில் கத்திய இயக்குனர்

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago