நடிகைக்கு பேய் பிடிச்சிடுச்சா?!. படப்பிடிப்புக்கு பயந்து கொண்டே போன பாக்கியராஜ்!.. திக் திக் பிளாஷ்பேக்!..
தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். சில சமயம் அது சீரியஸாக மாறும்.. சில சமயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.. சில சமயம் அது படக்குழுவினரை சிரிக்க வைக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், ஒரு நடிகையை பார்த்து படக்குழுவே ‘பேய் பிடித்துவிட்டது’ என பயந்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
படப்பிடிப்பில் இயக்குனர் கோபப்படுவது, நடிகர் அல்லது நடிகை கோபப்படுவது என்பது மிகவும் சகஜம். இயக்குனர் கோபப்பட்டால் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்காது. ஹீரோவோ, ஹீரோயினோ கோபித்துகொண்டு வீட்டுக்கு போய்விட்டாலும் அன்று படப்பிடிப்பு நடக்காது. இப்படி பல உதாரணங்கள் உண்டு.
இதையும் படிங்க: எனக்கு நெருக்கமான தோழன், தோழி இவர்கள்தான்!.. யாருமே யோசிக்க முடியாத மாதிரி சொல்லிட்டாரே ரஜினி!
பாரதிராஜாவிடம் பல படங்களில் உதவியாளராக இருந்தவர் கே. பாக்கியராஜ். பாரதிராஜா இயக்கிய பல படங்கள் கதை, வசனம் மற்றும் திரைக்கதைக்கு உறுதுணையாக இருந்தவர். பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த போது குருநாதர் வற்புறுத்தியதால் சினிமாவில் ஹிரோவாக நடிக்க துவங்கினார் பாக்கியராஜ்.
அதேநேரம் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் பாக்கியராஜ் நடித்தார். ராஜேஷ், வடிவுக்கரசி ஆகியோர் நடிப்பில் உருவான ‘கன்னி பருவத்திலே’ படத்தில் வில்லனாக நடித்தார் பாக்கியராஜ். வடிவுக்கரசி மீது சபலப்பட்டு அவரை அடைய நினைக்கும் கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருப்பார்.
இந்த படத்தில் நடித்தபோது பாக்கியராஜ் தனது முதல் மனைவி நடிகை பிரவீணாவை காதலித்து வந்தார். எனவே, வடிவுக்கரசி அவரிடம் விளையாட்டாக ‘நீங்க வேற பொண்ண சைட் அடிச்சா பிரவீணாகிட்ட சொல்லிடுவேன்’ என சொல்வாரம். இதையடுத்து பாக்கியராஜ், வடிவுக்கரசி இடையே நல்ல நட்பு உண்டாகி இருவரும் நெருக்கமானார்கள். ஆனால், படப்பிடிப்பில் இருந்த சிலர் இதை தவறாக சித்தரித்துவிட்டனர். இதைக்கேள்விப்பட்ட தயாரிப்பாளர் பாக்கியராஜையும், வடிவுக்கரசியையும் அழைத்து கடுமையாக திட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க: 6 முறை கமலுடன் மோதிய விஜய் படங்கள்… ஜெயித்தது உலகநாயகனா?.. தளபதியா?.. வாங்க பார்க்கலாம்..
இதனால் கோபமடைந்த வடிவுக்கரசி படப்பிடிப்பில் கோபப்பட்டு அங்கிருந்த பொருட்களை எல்லாம் தள்ளிவிட்டு காலாட்டா செய்திருக்கிறார். அங்கிருந்த பாக்கியராஜ் அவரிடம் சென்று ‘ஏம்மா இப்படி பண்றே?’ என கேட்க ‘உங்களையும் என்னையும் சேர்த்துத்தான் தவறாக பேசுகிறார்கள்’ என சொல்லி இருக்கிறார்.
இந்த விஷயம் செய்தியாளர்களுக்கு தெரியவர ‘வடிவுக்கரசிக்கு பேய் பிடித்துவிட்டது’ என பத்திரிக்கைகளில் எழுதிவிட்டார்கள். இது உண்மையாக இருக்குமோ என நினைத்த பாக்கியராஜ், இயக்குனர் மற்றும் கேமராமேன் ஆகியோர் அடுத்தநாள் கையில் எழுமிச்சை பழத்தோடு படப்பிடிப்புக்கு போனார்களாம்.