ஒரே ஒரு கேள்வியால் ஆடிப்போன சூர்யா.! திரைக்கதை மன்னன் கூறிய திரைமறைவு சீக்ரெட்ஸ்.!

Published on: June 13, 2022
---Advertisement---

சினிமாவில் பெரும்பாலும் வாரிசு நடிகர்கள் பெரிதாக சாதித்தது கிடையாது. அதே போல் அவர்கள் சினிமாவில் நடிப்பதற்கு அவ்வளவு ஆர்வம் காட்டியதும் கிடையாது. ஆனால், அதையும் மீறி சினிமாவில் சாதித்து வரும் வாரிசு நடிகர்கள் என்றால் அது சிவகுமார் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி தான் என்று கூறலாம்.

இதில் கார்த்தி முதல் படத்திலேயே சிறந்த நடிகர் என்று முத்திரை வாங்கினாலும், சூர்யா அதற்கு அப்படியே நேர்மாறானவர். ஆரம்பத்தில் நடிக்க தெரியாது ஆடத் தெரியாது என்று பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார்.

ஆரம்ப காலகட்டத்தில் அதாவது சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்றை அண்மையில் திரைக்கதை மன்னன் என புகழப்படும் இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள் சூர்யாவுடன் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார்.

அப்போது சினிமாவில் சூர்யா அறிமுகமாகாத நேரம். சூர்யாவை பார்த்து,’ தம்பி, நீ நன்றாக அழகா இருக்கிறாய். உனக்கு தான் எப்படியும் நடிப்பதற்கு வாய்ப்பு வந்திருக்குமே? நடிக்கலாமே?’ என்று கேட்டுள்ளார். உடனே சூர்யா பதறிப்போய் விட்டாராம். ‘ஐயையோ நான் நடிக்க போவது கிடையாது. எனக்கு அது வராது. எனது பாதை வேறு.’ என்று பதறி விட்டாராம்.

இதையும் படியுங்களேன் – தளபதி 66 காட்சிகள் இணையத்தில் லீக்?…அதிர்ந்த போன படக்குழு!…எங்க விஜய் ரெம்ப பாவம்யா….

அப்படி பதறிய ஒரு எட்டு/ஒன்பது மாதத்திற்குள்ளாகவே, அடுத்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி விட்டாராம் சூர்யா. இதனை பாக்யராஜ் அவர்கள் அண்மையில் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.

தற்போது சூர்யாவின் நடிப்பு பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. நடிப்பின் நாயகன் என்று ரசிகர்கள் அவரை கொண்டாடும் வகையில் அவரது நடிப்பு படத்திற்கு படம் மெருகேற்றி கொண்டே செல்கிறது. சில நிமிடங்கள் வந்த ரோலக்ஸ் கதாபாத்திரம், தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.