என் வீட்டு பொம்பளங்களையும் நீ கெடுத்து வச்சிருக்க!.. பாக்கியராஜிடம் கோபப்பட்ட சிவாஜி!..

நடிகர் திலகம் சிவாஜியும், பாக்யராஜூம் இணைந்து நடித்த படம் தாவணிக்கனவுகள். 1984ல் வெளியான இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கி நடித்தார் பாக்யராஜ். இந்தப் படத்தில் நடந்த ஒரு சில சுவையான சம்பவங்களைப் பற்றி பாக்யராஜ் சொல்கிறார் பார்க்கலாமா...

என்னை ஊருல இருக்குறவங்க, நெருக்கமா பழகினவங்க தான் பாக்கின்னு கூப்பிடுவாங்க. அப்புறம், கலைஞர், சிவாஜி எல்லாரும் அப்படி கூப்பிட்டாங்க.

நான் வசனமே எழுதறது இல்ல. ஷாட் எடுக்கும்போது தான் சொல்வேன். அதை அப்படியே சொல்வாங்க. டயலாக்கை கேட்குறாரு சிவாஜி. நான் கொடுக்காம இருக்கேன். யோவ் டயலாக்கை எங்கயான்னு கேட்குறாரு. இருந்தா தானே தர்றதுக்குன்னு சொல்றேன். என்னய்யா சொல்றேன்னு கேட்குறாரு. இல்லண்ணே. எனக்கு எல்லா காட்சியும் மனசுல அப்படியே பதிஞ்சிட்டு. அதனால ஷாட் எடுக்கும்போது தான் டயலாக் சொல்வேன். அசிஸ்டண்ட் எழுதிக்குவாங்கன்னு சொன்னேன். இப்படி தான் எல்லா படமும் எடுத்தியான்னு கேட்டாரு. ஆமாண்ணேன்.

TK

TK

அப்புறம் எப்படியா சக்சஸ் ஆனேன்னு கேட்டு ஆச்சரியப்பட்டார். இன்னொரு தடவை ‘ பாக்கி நீ எங்க வீட்டு பொம்பளைகளை எல்லாம் ரொம்ப கெடுத்து வச்சிருக்கடான்’னு சொன்னாரு. நான் என்ன செஞ்சேன்னு கேட்டேன். இல்ல ஒருநாள் எனக்கு சூட்டிங் 5 மணிக்கு முடிய வேண்டியது இரண்டரை மணிக்கு முடிஞ்சிட்டு. வீட்டுக்கு வந்து பார்க்குறேன். பொம்பளைங்கள எல்லாம் காணோம். எல்லாரும் எங்கடா போயிருக்காங்கன்னு கேட்டேன்.

எல்லாரும் சினிமாவுக்குன்னாரு. சரி. வேலைக்கார பொம்பளைய எங்கன்னு கேட்டேன். இல்ல. அவங்களையும் கூட்டிட்டுத்தான் போயிருக்காங்க. அப்படி என்னடா படம்னு கேட்டேன். பாக்கியராஜ் நடிச்ச படம்... முந்தானை முடிச்சுன்னு வந்துருக்கான். மறுநாளும் சீக்கிரம் சூட்டிங் முடிச்சி வந்தேன். எல்லாரும் எங்கடா போயிருக்காங்கன்னு கேட்க, இன்னிக்கும் சினிமாவுக்குத் தான்.

‘இன்னிக்கு எந்த சினிமா?ன்னு கேட்க... அதே முந்தானை முடிச்சு தான்னுதான்னு சொன்னாங்க. படம் முடிஞ்சி வரும்போது என்னை பார்த்ததும் ‘அச்சச்சோ என்ன படம்..? இப்படி ஒரு படமா, ஐயய்யோ பார்க்கவே முடிலன்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க. பார்க்கவே முடிலன்னா இன்னிக்கு 2வது தடவை போயிட்டு வந்துட்டீங்க. இன்னும் எத்தனை தடவை பார்க்கப் போறீங்கன்னு’ கேட்டேன். உன் படம் அவங்களுக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு’ என சிவாஜி என்னிடம் சொன்னார்’ என பாக்கியராஜ் கூறியிருந்தார்.

 

Related Articles

Next Story