உடனே சி.எம்-னா இப்டிதான் நடக்கும்!.. விஜயை போட்டு பொளந்த தயாரிப்பாளர்….

Published on: January 26, 2026
vijay
---Advertisement---

நடிகர் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் இது அவரின் கடைசி படமாக ரசிகர்கள் கருதினார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. அதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.. இசை வெளியீட்டு விழாவிற்கு ஒரு லட்சம் பேர் வருகிறார்கள் என்றால் உலகம் முழுக்க ஜனநாயகன் படம் எப்படிப்பட்ட வசூலை பெறும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் எழுந்தது.

ஆனால் சென்சாரில் சிக்கியதல் படம் இதுவரை வெளியாகவில்லை. பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன்பின் உச்சநீதிமன்றுக்கு சென்று, அதன்பின் உயர் நீதிமன்றத்திலேயே வழக்கு நடந்து தற்போது தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. வருகிற 27ம் தேதி ஜனநாயகன் படத்தின் சென்சார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது. படத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் வருகிற 29ம் தேதி படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் ‘விஜய் அரசியலுக்கு வந்ததுதான் பிரச்சனை.. அதனால்தான் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை.. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. ஆனால் மக்களிடம் சென்று படிப்படியாக அவர்களின் நம்பிக்கை பெற்று சில எம்எல்ஏக்களை பெற்று படிப்படியாக வளர வேண்டும்..

விஜய் உடனே தான்தான் முதலமைச்சர் என்றார்.. எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என கூப்பிட்டார்கள். இவர் முடியாது என்றார்.. அதனால், ஜனநாயகனை வரவிடாமல் செய்துவிட்டார்கள்.. இதனால் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. அவர் சம்பளம் வாங்கிக் கொண்டு போய்விட்டார்.. படத்தில் 400 கோடி 500 கோடி பணம் போட்ட தயாரிப்பாளருக்குதான் நஷ்டம்’ என்று பேசியிருக்கிறார்.