ஒரே ரெய்டிலேயே பம்மிய தளபதி- விஜயை வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்

தமிழில் ரஜிக்கு அடுத்தபடியாக வசூல் சக்ரவர்த்தியாக இருப்பவர் விஜய். கடந்த சில ஆண்டுகளாக இவரது படங்களில் மாநில அரசையும், மத்திய அரசையும் விமர்சித்து வசனங்களை வைத்து வந்தார். இதன் மூலம் தன் அரசியல் ஆசையை நாசூக்காக வெளிபடுத்தி வந்தார். குறிப்பாக அவரது பட பாடல்கள் ஆடியோ வெளியீட்டி விழாவில் அதிரடியாக வசனம் பேசி தனது ரசிகர்களை குதூகலப்படுத்துவது இவரது வழக்கம் என்று பலரும் விமரசனம் செய்வது உண்டு.

vijay
இந்தநிலையில் ருத்ரன் இயகியுள்ள ரூ2000 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட பிரபல தயாரிப்பாள்ரான கே.ராஜன் விஜய் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுட்த்தினார்
விழாவில் அவர் பேசியபோது, விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து அவர் முன்வைத்த விமர்சனத்தால் கடும் மன உளைச்சலை கொடுத்தார்கள். சுமார் 12 மணி நேரம் அவரது வீட்டில் ரெய்டு நடந்தது.னெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த அவரை சென்னைக்கு காரில் அழைத்துவந்து சோதனை செய்தார்கள். அவர்கள் என்ன சோதனை செய்தார்களோ தெரியவில்லை அதற்கு பின்பு விஜய் மத்திஅரசை விமர்சிப்பதை நிறுத்திவிட்டார்.

k.rajan
சொல்லபோனால் விஜய் பயந்துவிட்டார். ஏனென்றால் அவர் கோடீஸ்வரர்.அதிக பணம் சேத்துள்ளவர்களூக்கு ஆண்மை போய்விடுகிறது. எங்களை போன்ற ஏழைகளுக்குதான் போராட வேண்டும் என்று தோன்றுகிறது.