கொத்தனாருக்கு வீடு சொந்தம் ஆகுமா?!.. இளையராஜாவுக்கு இருப்பது பேராசை!.. விளாசிய பிரபலம்!..
நான் இசையமைத்த பாடல்கள் எனக்கு மட்டுமே சொந்தம். அதற்கு சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. பல இசை நிறுவனங்கள் எனது பாடல்களை ஆன்லைனில் பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருகின்றன. எனவே, எனக்கு அதில் ராயல்ட்டி கொடுக்க வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
பல வருடங்களாகவே இந்த குற்றச்சாட்டை சொல்லி வந்த இளையராஜா இப்போது நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார். ராஜா தன்னை எல்லோரையும் விட உயர்ந்தவன் என்போது போல் நினைத்து கொள்கிறார் என நீதிமன்றத்தில் இசை நிறுவனங்கள் சொன்னபோது ‘ஆமாம். நான் உயர்ந்தவன்தான்’ என பதில் சொன்னார் இளையராஜா.
இதையும் படிங்க: இளையராஜா – வைரமுத்து ரெண்டு பெருமே வொர்த் இல்ல!.. கங்கை அமரன் உளறக்கூடாது!. பிரபலம் சொல்வது என்ன?..
இந்த விஷயம் விவாத பொருளாக மாறி இருக்கிறது. ‘சம்பளம் வாங்கி கொண்டுதானே ராஜா இசையமைத்தார். அதன்பின் எப்படி அவர் அதற்கு உரிமை கொண்டாட முடியும்?’ என பலரும் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். ராஜாவின் தீவிர ரசிகர்கள் ‘அவர் கேட்பது சரிதான்’ என முட்டுக்கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், சினிமா பிரச்சனைகளை மனதில் பட்டதை அப்படியே பேசும் தயரிப்பாளர் கே.ராஜனிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது ‘ஒரு படத்திற்கு தயாரிப்பாளர்தான் கதை, நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கிறார். இசையமைப்பாளரிடம் நல்ல மெட்டுக்களை இயக்குனரோ, தயாரிப்பாளரோ வாங்குகிறார்கள்.
இசையமைப்பாளருக்கு என்ன சம்பளமோ கொடுத்துவிடுகிறார்கள். வீடு கட்டி முடித்தபின் கொத்தனார் ‘இந்த வீடு எனக்குதான் சொந்தம்’ என சொன்னால் அது எவ்வளவு முட்டாள்தனமானதோ அது போலத்தான் இளையராஜா சொல்வது. அவரை போல பாடலாசிரியர்கள் சொன்னால்?.. பாடல்களுக்கு இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்கள் சொன்னால் என்னாவது?..
இதையும் படிங்க: இளையராஜாவுடன் உடனே நடந்தது… அந்த பிரபலத்துக்காக மூன்று மாதம் காத்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான்!…
படத்தில் நடித்த நடிகர் ‘இந்த படம் எனக்கு சொந்தம்’ என எப்படி சொல்ல முடியாதோ அப்படித்தான். இளையராஜா இசைஞானிதான். சந்தேகமில்லை. ஆனால், அதிகமான பணத்தாசையில் இப்படி நடந்து கொள்கிறார். வைரமுத்து ஒரு சிறந்த கவிஞர். அவர் எங்களால்தான் வளர்ந்தார் என கங்கை அமரன் சொல்வது அபத்தம்.
அப்படி பார்த்தால் இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்ததே பஞ்சு அருணாச்சலம் என்கிற ஒரு தயாரிப்பாளர்தான். அவர் இளையராஜாவை சொந்தம் கொண்டாட முடியுமா?. ஒவ்வொருவரும் அவர்களின் திறமையால் வளர்ந்தவர்கள் அவ்வளவுதான். தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகவே நீதிமன்றத்தில் தீர்ப்பு என நான் எதிர்பார்க்கிறேன்’ என கே.ராஜன் பேசினார்.