ஒரே வார்த்தை.! கமலின் மெகா ஹிட் படத்தையே வேண்டாம் என உதறி தள்ளிய பிரபல இயக்குனர்.!

by Manikandan |   ( Updated:2022-01-19 17:48:33  )
ஒரே வார்த்தை.! கமலின் மெகா ஹிட் படத்தையே வேண்டாம் என உதறி தள்ளிய பிரபல இயக்குனர்.!
X

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போதும் முன்னணி இளம் நடிகர்களுக்கு கடும் போட்டியாக தான் இருக்கிறார். இப்போதும் அவரை வைத்து இயக்க முன்னனி இயக்குனர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அப்படி இருக்கையில் அவர் வளர்ந்து உச்சத்தில் இருந்த நேரத்தில் கமலை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்துள்ள ஒரு முன்னணி இயக்குனரை பற்றி தெரியுமா?

அப்படி ஒருத்தர் இருந்துள்ளார். அவர் வேறு யாருமல்ல கமர்சியல் கிங் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தான். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்ச தந்திரம், தசாவதாரம் என அனைத்து படங்களும் மெகா ஹிட் திரைப்படங்கள்.

அவ்வை சண்முகி படத்திற்கு பிறகு கமலை இயக்கும் வாய்ப்பு கே.எஸ்.ரவிக்குமாருக்கு கிடைத்தது. காதலா காதலா எனும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு தான் அது. படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கம் என அனைத்து பணிகளிலும் இருந்துள்ளார். அதன் பிறகு ஷூட்டிங் இடம் பார்க்கும் வரை சென்றுவிட்டார்.

அப்போது தான் திரை சங்கத்தில் பிரச்சனை எழுந்துள்ளது. அந்த சமயம் இயக்குனர் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமாரை அடுத்த படம் இயக்க தற்போதைக்கு வேண்டாம் தற்போது சங்கத்தில் பிரச்சனை நிலவுகிறது என கூறவே, மறுமொழி கூறாமல் ஒத்துக்கொண்டார். கமல் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை நிராகரித்து விட்டார்.

கமல்ஹாசன் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தபோது கூட இயக்குனர் சங்கம் கேட்டுக்கொண்டதால் மறுத்த கே.எஸ்.ரவிக்குமாரை லெஜண்ட்ரி இயக்குனர் பாலச்சந்தர் வரையில் மொத்த இயக்குனர்களும் பாராட்டினராம். சங்க கட்டத்திற்குள் ரவிக்குமார் நுழைந்ததும் அனைவரும் கைதட்டி வரவேற்றனராம்.

பின்னர் காதலா காதலா திரைப்படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் எனும் தெலுங்கு பட இயக்குனர் இயக்கி இருந்தார். படமும் சூப்பர் ஹிட்டானது.

Next Story