காத்திருந்த தியேட்டர் ஓனர்கள்.! தெறித்து ஓடிய மாஸ்டர் தயாரிப்பாளர்.! பகீர் பின்னணியில் உதயநிதி.!

by Manikandan |
காத்திருந்த தியேட்டர் ஓனர்கள்.! தெறித்து ஓடிய மாஸ்டர் தயாரிப்பாளர்.! பகீர் பின்னணியில் உதயநிதி.!
X

மாஸ்டர் திரைப்படம் தான் கடந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகளால் முடங்கி கிடந்த தியேட்டர் ஓனர்களை புத்துணர்ச்சியுடன் மீண்டும் எழுந்து நிற்க வைத்தது என்றே கூறலாம். அப்படத்தின் வெற்றி அடுத்தடுத்து மற்ற படங்கள் வெளியாவதற்கு பேருதவியாக இருந்தது.

இருந்தும் அதனை முழுதாக தியேட்டர்காரர்கள் முழுதாக அனுபவிக்க முடியவில்லை. ஏனென்றால் படம் வெளியான 15 நாட்களிலேயே மாஸ்டர் திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வெளியாகி தியேட்டர் ஓனர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

அதனால், மாஸ்டர் தயாரிப்பாளர் லலித் குமார் மீது தியேட்டர்காரர்கள் மிகுந்த கோபத்துடன் இருந்தனர். இதனால் அடுத்த படம் தியேட்டருக்கு வரட்டும் பாத்துக்கலாம் என இருந்த தியேட்டர் ஓனர்களுக்கு டிமிக்கு கொடுக்கும் வகையில், அடுத்த படமான மகான் OTT வசம் சென்றது.

இதையும் படியுங்களேன் - நன்றி மறந்த தனுஷ்.! சிக்கிக்கொண்ட சிம்பு.! அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க.?!

ஆனால், காத்துவாக்குல ரெண்டு காதல் எப்படியும் தியேட்டர் தான் அது வரட்டும் என காத்திருந்தனர் தியேட்டர்காரர்கள். அனால், விவரமான லலித் குமார் அப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸிடம் கொடுத்துவிட்ட்டார்.

உதயநிதி ஸ்டாலின் தியேட்டர் ஓனர்களிடம் இணக்கமாக இருக்கிறார். மேலும் அவர் யார் என்று ஊருக்கே தெரியும் அதானல் அவரை பகைத்து கொள்ளவும் முடியாது என்பதால் தியேட்டர் ஓனர்கள் மீண்டும் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

Next Story