கவர்ச்சி நடிகை ரேஞ்சிக்கு இறங்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ காவ்யா!.. உனக்கு என்னாச்சி செல்லம்!...
Kaavya Arivumani: பொதுவாக மாடலிங் துறையில் வர நினைக்கும் பலருக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அதிகமாகவே இருக்கும். ஆனால், வாய்ப்பு கிடைக்காமல் சீரியல் பக்கம் போவதுண்டு. அதில் ஒருவர்தான் காவ்யா அறிவுமணி. இவர் சென்னையை சேர்ந்தவர். கல்லூரி முடித்தபிறகு சினிமாவில் நுழைய முயன்றார்.
ஆனால், வாய்ப்புகள் இல்லாமல் போக சின்னத்திரை பக்கம் வாய்ப்பு தேடினார். ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற பாரதி கண்ணம்மா சிரீயலில் ஒரு சின்ன வேடத்தில் அறிமுகமானார். அதன்பின், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதாவது, அந்த சீரியலில் முல்லையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சித்ரா மரணமடைந்ததால் காவ்யாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவரும் முல்லை வேடத்தில் சில எபிசோட்களில் நடித்து சின்னதிரை சீரியல் ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால், திடீரெனெ அந்த சீரியலில் இருந்து விலகினார்.
சினிமாவில் எப்படியாவது நுழையவே அவர் அந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் சினிமாவில் வாய்ப்புகள் அமையவில்லை. சில படங்களில் சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே கிடைத்தது. எப்படியாவது, வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெறுவதற்காக போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், திடீரென கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு உடையணிந்து போஸ் கொடுத்து காவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.