இளையராஜா போட்ட டியூனை தூக்கி எறிந்த இயக்குனர்.. சும்மா இருப்பாரா இசைஞானி?..

ilaiyaraja
Ilaiyaraja: இசைக்கு ராஜா இளையராஜா. தமிழ் சினிமாவில் பல தலைமுறைகளாக இசையில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் இசைஞானி இளையராஜா. 'அன்னக்கிளி' திரைப்படத்தின் மூலம் தனது இசை பயணத்தை ஆரம்பித்தவர் இன்றுவரை இயக்குனர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். தன் இசையின் மூலம் ரஜினி, கமல், மோகன் என இவர்களின் படங்களுக்கு இளையராஜாவின் இசை தான் ஒரு பெரிய மூலதனம்.
இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்களாலேயே படங்கள் வெற்றியடைந்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. அந்த அளவுக்கு இவருடைய பாட்டுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் அடிமை என்றுதான் சொல்ல வேண்டும். அமைதியான சூழலில் இவருடைய இசையில் அமைந்த பாடல்களை கேட்டுக் கொண்டே போனால் மனதிற்கு மிகவும் இதமாக இருக்கும். காரில் பயணம் செய்யும் போது இவருடைய இசையை கேட்டுக் கொண்டே போனால் அந்தப் பயணம் மிகவும் திருப்திகரமாக அமையும்.
இதையும் படிங்க: ஒரே நாளில் ரோகிணியை இப்படி கொடுமைப்படுத்தும் விஜயா… மீனா எஸ்கேப் தான்!…
இப்படி பல சூழ்நிலைகளுக்கு இளையராஜாவின் இசை தான் பெரிய உறுதுணையாக அமைந்திருக்கிறது. இசையில் பல சாதனைகளை படைத்திருந்தாலும் இவரைப் பற்றிய பல விமர்சனங்கள் ரசிகர்களை அதிர்ச்சடைய வைத்திருக்கிறது. மிகவும் கோபக்காரர் ,பிடிவாத குணம் படைத்தவர், சுயநலவாதி என்றெல்லாம் இளையராஜாவை பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால் இவரைப் பற்றி நன்கு அறிந்த ஒரு சில பிரபலங்கள் இவருக்கு ஆதரவாகவே பேசுகின்றனர். அந்த வகையில் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ‘கடைசி விவசாயி’. அந்தப் படம் தேசிய விருதை பெற்ற திரைப்படம். அதில் முதலில் இசையமைத்தவர் இளையராஜா தானாம். ஆனால் அவர் இசையமைத்து கொடுத்த டியூன் மணிகண்டனுக்கு திருப்திகரமாக இல்லையாம்.

viv
இதையும் படிங்க: மூன்று கெட்டப்புகளில் நடித்தும் மூட் அவுட் பண்ணாத 5 நடிகர்கள்!… மூன்று முகத்தில் கலக்கிய ரஜினி!..
அதனால் இளையராஜாவிடம் சொல்லாமலேயே சந்தோஷ் நாராயணனை இசையமைக்க சொல்லி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த இளையராஜா இசையமைப்பாளர் சங்கத்திடம் மணிகண்டன் மீது புகார் ஒன்றை கொடுத்தாராம். இருந்தாலும் மணிகண்டன் அந்த படத்திற்கு இசை அமைத்ததற்காக இளையராஜாவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக கொடுக்க முயன்ற போது அதை வாங்க மறுத்து விட்டாராம் இளையராஜா.