ஒவ்வொரு வருடமும் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் மத்தி அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 2021ம் ஆண்டுக்கான அதாவது 69வது தேசிய திரைப்பட விருதுகள் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. தேசிய விருதுகள் என்பது எப்போதும் கவனம் ஈர்ப்பதாகவே இருக்கிறது.
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் இந்த விருது வழங்கப்படுகிறது. 1954 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. திரைப்பட துறையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான், 2021ம் வருடத்திற்கான விருது இப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: உச்சக்கட்ட கோபத்தில் விஜய்.. இனி இந்த தப்பு நடக்கவே கூடாது.. அவசர கூட்டத்திற்கு இதுதான் காரணமா?..
தமிழ் சினிமாவை பொறுத்தவரை 2021ம் வருடத்திற்கான படங்களில் ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை, கர்ணன், ஆர்.ஆர்.ஆர் என பல படங்கள் போட்டியில் இருந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பார்த்திராத படி காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி படத்திற்கு 2 தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நல்லாண்டி என்கிற வயதான ஒருவர் முக்கிய வேடத்திலும், விஜய் சேதுபதி ஒரு வித்தியாசமான வேடத்திலும் நடித்திருந்தனர். இந்த படம் எல்லோராலும் பாராட்டப்பட்டாலும் வியாபாரா ரீதியாக வெற்றியடையவில்லை. இந்நிலையில்தான் இந்த படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, சிறந்த தமிழ் பட பிரிவிலும் இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சமூகவலைத்தளங்களிலும் பலரும் இப்படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பலான விஷயமே பரமசுகம்… பெண் இல்லாமல் தூக்கம் வராது… ரஜினியின் ஓபன் டாக்!
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…