காதல் பட நடிகரை ரூமில் வைத்து சாத்திய வடிவேலு… மறைக்க அவர் போட்ட மட்டமான திட்டம்..! நீங்க திருந்தலையா?
Vadivelu: தமிழ் சினிமாவில் புகழ் இருக்கும் அதே அளவுக்கு திமிர் காட்டும் பிரபலங்கள் நிறைய இருக்கிறார்கள். அதில் மிக முக்கிய இடத்தினை பிடிப்பவர் வடிவேலு தான். அவர் தன்னுடைய சகாக்களுக்கே நல்லது செய்ததாக இன்று வரை தகவல் இல்லை. அப்போ வெளி பிரபலங்களுக்கு என்னவெல்லாம் செய்திருப்பார்.
என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வடிவேலு. இருந்தும் அவரை அடையாளம் காண செய்தது என்னவோ தேவர்மகன் திரைப்படம் தான். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற இவரின் இசக்கி கதாபாத்திரமும் இடம் பிடித்தது. இப்படத்தினை தொடர்ந்து வடிவேலுவிற்கு வாய்ப்புகள் வந்தது.
இதையும் படிங்க: அயலானில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் அல்ல அந்த நடிகருக்கும் சம்பளம் இல்லயாம்.!
ஒரு கட்டத்தில் அவருக்கான ரசிகர் வட்டம் அதிகமாகியது. காமெடி ரோலில் கவுண்டமணி-செந்திலுக்கு அடுத்த இடம் பிடித்தார். போகப் போக தன்னுடன் சில நடிகர்களை இணைத்து கொண்டு படத்தில் தனக்கென்ற ட்ராக்கை அவரே எழுதிக்கொள்ளும் நிலை வரை உருவெடுத்தார். ஆனால் அப்படி பெரிய புகழை அடைந்த வடிவேலு வாழ்க்கையும் சரிக்கியது.
இணைந்து இருந்த எந்த நடிகர்களுக்கும் இதுவரை வடிவேலு நல்லதே நினைத்தது இல்லையாம். அவர்களை பேட்டி எடுக்கும் போதெல்லாம் வடிவேலு செய்த தில்லாலங்கடியை சொன்ன போது அதிர்ச்சியாகவே ரசிகர்களுக்கு இருந்தது. அவர்களுக்கு இப்படி என்றால் வளர்ந்து வந்த காதல் பட சுகுமாருக்கு நடந்திருக்கும் சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: லியோ படத்தின் ரிசல்ட்!. லோகேஷுக்கு ரஜினி வைத்த செக்.. மொத்தமும் போச்சா!…
சுகுமாரும் மூத்த கலைஞர் என அங்கு போக சிங்கமுத்து, போண்டா மணி, முத்துக்காளை உள்ளிட்டோருடன் இன்னும் சிலரும் அங்கிருந்து இருக்கின்றனர். வடிவேலு ஒரு கட்டத்தில் போண்டா மணி, முத்துக்காளையை வெளியில் அனுப்பி விட்டு கோபமாக பேச தொடங்கி இருக்கிறார். என்னை மாதிரி நடித்து வாய்ப்பு கேட்கிறீயாமே? எனக் கேட்க அவர் பேசுவதற்குள் வடிவேலு, சிங்கமுத்து உட்பட சுத்தி இருந்த அனைவருமே சுகுமாரை சரமாரியாக அடித்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: சூர்யவம்சம் படத்தில் தேவயானி வேண்டாம்… இந்த நடிகை தான் வேணும்.. அடம் செய்த சரத்குமார்… ஆஃப் செய்த தயாரிப்பாளர்..!