‘கைதி’ பட இசையமைப்பாளருக்கா இப்படி ஒரு நிலைமை?.. அவர் எடுத்த திடீர் முடிவு!..
தமிழ் சினிமாவில் எத்தனையோ கலைஞர்களின் திறமைகள் வெளியே தெரியாமலேயே இருக்கின்றன. பொதுவாக மீடியாக்களில் தலையை காட்டுகிறவர்கள் மட்டுமே ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்களாக கருதப்படுகின்றனர். அந்த வகையில் பல படங்களுக்கு தரமான இசையமைத்து இன்று பல பேருக்கு அது பிஜிஎம்மாக பல மேடைகளில் ஒலித்துக் கொண்டிருப்பது இசையமைப்பாளர் சாம் சிஎஸின் பாடல் தான்.
அவர் விக்ரம் வேதா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கைதி, ராக்டரி ராமன் விளைவு போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர் தான் சாம் சிஎஸ். இவரை பெரும்பாலும் பேட்டிகளில் நாம் காண முடியாது. அதற்கு காரணம் அவர் மீடியாக்களை விரும்புவதில்லை.
ஏனெனில் அவரின் கவனம் இசையில் இருந்ததால் மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்து வந்திருக்கிறார். ஆனால் அது எவ்ளோ பெரிய தப்பு என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்திருக்கிறார் சாம். ஒரு சமயம் எலக்ட்ரிக் ரயில் பயணம் செய்து கொண்டிருர்ந்தாராம் சாம்.
அப்போது அவரது சூட்கேஸ் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை இடித்து விட்டதாம். இதனால் கடுப்பான அந்த நபர் சாம் சிஎஸ் என தெரியாமல் கண்டபடி கெட்டவார்த்தைகளால் திட்டியிருக்கிறார். திட்டிவிட்டு இறங்கும் போது அந்த நபரின் போன் ஒலித்திருக்கிறது.
அதில் ரிங் டோனாக சாம் சிஎஸ் இசையில் வெளிவந்த விக்ரம் வேதா படத்தின் bgm ஒலித்திருக்கிறது. இதை பார்க்கும் போது சாமிற்கு சந்தோஷப்படுவதா? இல்லை வேதனைப்படுவதா என்று இருந்தாராம். அதன் பிறகு தான் புரிந்தது மீடியா எந்த அளவுக்கு நம்மை வெளியில் பிர்பலப்படுத்துகிறது என்று புரிந்து கொண்டாராம்.
இதையும் படிங்க : வடிவேலு இந்த தப்பை செஞ்சிருக்கவே கூடாது- வைகைப்புயலை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்… அப்படி என்னவா இருக்கும்?
அந்த நிகழ்விற்கு பிறகு இப்போது நிறைய பேட்டிகளை கொடுத்து வருவதாகவும் அது இன்னும் என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறது எனவும் கூறினார்.