Connect with us
Vadivelu

Cinema News

வடிவேலு இந்த தப்பை செஞ்சிருக்கவே கூடாது- வைகைப்புயலை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்…

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி

கடந்த 2006 ஆம் ஆண்டு வடிவேலு நடிப்பில் வெளிவந்த “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி” திரைப்படம் மிகப் பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கியிருந்தார். வடிவேலுவின் கேரியரிலேயே மிகவும் முக்கியமான திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது. அதே போல் வடிவேலு கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமும் இதுதான்.

Imsai Arasan 23aam Pulikesi

Imsai Arasan 23aam Pulikesi

இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து வடிவேலு, “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அத்திரைப்படம் படுதோல்வியடைந்தது. அதே போல் “தெனாலி ராமன்”, “எலி” ஆகிய திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படங்களும் தோல்வியை தழுவின.

வடிவேலுக்கு ரெட் கார்டு

இதனை தொடர்ந்து “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தமானார். இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தபோது இத்திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வடிவேலு சரியாக படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தர மறுத்ததால் இத்திரைப்படம் அப்படியே டிராப் ஆனது என கூறப்பட்டது. மேலும் இதனால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர், தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

Imsai Arasan 23aam Pulikesi

Imsai Arasan 23aam Pulikesi

இப்புகாரை தொடர்ந்து வடிவேலு சினிமாவில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டது. எனினும் இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வர, கடந்த 2021 ஆம் ஆண்டு வடிவேலு மீதான தடை நீங்கியது. இதனை தொடர்ந்துதான் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “மாமன்னன்”, “சந்திரமுகி 2” ஆகிய திரைப்படங்களில் வடிவேலு ஒப்பந்தமானார்.

வடிவேலு இப்படி செய்திருக்கக்கூடாது

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு நேயர் ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதாவது, “வடிவேலு ஏன் சிம்புதேவன் போன்ற நல்ல இயக்குனர்கள் கூறுகிற கதையை கேட்டு நடிக்காமல், கதையில் தலையிட்டு தன்னை தானே தாழ்ந்த நிலைக்கு கொண்டுப்போயிருக்கிறார்?” என்பதுதான் அந்த கேள்வி.

Chitra Lakshmanan

Chitra Lakshmanan

இந்த கேள்விக்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “வடிவேலு தாழ்ந்த நிலைக்குச் சென்றதாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் சிம்புதேவனின் திரைப்படத்தில் அவர் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து நடித்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து” என கூறியிருந்தார்.

மேலும் பேசிய அவர், “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி என்ற வெற்றிப்படத்தை வடிவேலுவுக்கு தந்தவர் சிம்புதேவன். அதுமட்டுமல்லாமல் வடிவேலுவை மனதில் வைத்துக்கொண்டு அந்த படத்தில் எல்லா காட்சிகளையும் மிகச்சிறப்பாக வடிவமைத்திருந்தார் சிம்புதேவன். அப்படிப்பட்ட இயக்குனரோடு வடிவேலு தொடர்ந்து படம் பண்ணியிருந்தால் நிச்சயமாக பல வெற்றித்திரைப்படங்களை அவர் தந்திருக்க முடியும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருமணம் ஆவதற்கு முன்பே குழந்தையை பெற்றெடுத்த கமல்ஹாசனின் மனைவி… என்னப்பா சொல்றீங்க?

google news
Continue Reading

More in Cinema News

To Top