Cinema History
பருத்திவீரன் படம் பார்த்த கலைஞர்!.. அதுக்கு அப்புறம் நடந்ததெல்லாமே ஹைலைட்தான்!..
கடந்த சில நாட்களாகவே பருத்திவீரன் பஞ்சாயத்துதான் நாலா பக்கமும் ஓடி வருகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் பருத்திவீரன் படம் தொடர்பாக அமீர் – கலைஞர் கருணாநிதிக்கும் இடையே நடந்த சம்பவங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.
பருத்திவீரன் படம் உருவாவதற்கு முன் அமீர் கலைஞரை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். பருத்தீவிரன் படத்தை கலைஞருக்கு போட்டுக்காட்ட சிவக்குமார் ஆசைப்பட்டார். ஆனால், கலைஞர் என் மீது கோபமாக இருப்பார். எனவே, நான் பிரிவ்யூ தியேட்டருக்கு வரவில்லை என அமீர் சொல்ல ‘அவர் அப்படிப்பட்டவர்லாம் இல்லை’ என சொல்லி சிவக்குமார் அமீரை அழைத்து சென்றார்.
இதையும் படிங்க: அன்னபூரணி விமர்சனம்: வெஜிடேரியன்களை இப்படி வெறியேத்துறாரே நயன்தாரா?.. படம் விளங்குச்சா!..
முன் வரிசையில் சிவக்குமாரும், கலைஞரும் அமர, அமீர் அவர்களுக்கு பின்னால் அமர்ந்துள்ளார். பொதுவாக படம் ஓடும்போது படத்தை பற்றி கருணாநிதி எதாவது பேசிக்கொண்டே இருப்பார். ஆனால், பருத்திவீரன் படத்தை எதுவுமே பேசாமல் பார்த்திருக்கிறார். படம் இவருக்கு பிடிக்கவில்லையோ என சிவக்குமாரும், அமீரும் நினைத்திருக்கிறார்கள்.
படம் முடிந்ததும் ‘இயக்குனரை நான் பார்க்கணும்’ என சொல்ல சிவக்குமார் அமீரை அறிமுகம் செய்து வைத்தார். நீ படம் எடுத்த மாதிரியே தெரியல. உன் கேமராவை அந்த கிராமத்தின் கோவிலில் உச்சி கோபுரத்தில் மேல் வைத்து நடந்ததை அப்படியே எடுத்தது மாதிரி இருந்தது. ரொம்ப யதார்த்தமா இருக்கு.. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும்’என மனமார பாராட்டினார்.
அதன்பின் ‘சரி. அந்த கிராமம் எங்க இருக்கு??’ என கலைஞர் கேட்க அமீருக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘என்ன ஆச்சு ஐயா.. எதாவது பிரச்சனையா?’ என கேட்க. ’இல்ல இல்ல அந்த கிராமத்துல கரண்ட் கம்பத்தையே காணோம். எந்த கிராமம்னு சொன்னின்னா கரண்ட் கொடுத்திடலாம்’ என சொல்லியிருக்கிறார். அது அமீர் திட்டமிட்டு எடுத்ததுதான். ஆனால், கலைஞர் அதை கண்டுபித்தது அமீருக்கு பெரிய ஆச்சர்யம். ஏனெனில் அதை அவ்வளவு நுணுக்கமாக யாரும் கவனித்து அவரிம் கேட்கவில்லை.
இதையும் படிங்க: அண்ணா!.. இனி எப்ப வந்து உதைப்பீங்க!.. தம்பி அழுறேன் வாங்க.. விஜயகாந்துக்காக உருகிய மன்சூர் அலி கான்
விடைபெறும் முன் அமீரிடம் ‘ஒருநாள் என் வீட்டுக்கு சாப்பிட வா’ என அமீரை அழைத்திருக்கிறார். வெறும் சம்பிரதாயத்திற்கு சொல்கிறார் என அமீர் நினைத்தாராம். சில நாட்களில் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனிடமிருந்து அமீருக்கு தொலைப்பேசி அழைப்பு வருகிறது. ‘நாளைக்கு மதியம் கலைஞர் உங்களை சாப்பிட வர சொன்னார்’ என சொல்ல, அமீரும் சென்றிருக்கிறார்.
சினிமா, அரசியல், சமூகம் என இவரும் பேசியுள்ளனர். அமீருக்கு தயாளு அம்மாவே உணவை பரிமாறியிருக்கிறார். கிளம்பும்போது ‘ஐயா எனக்கு நீங்க ஒரு நினைவு பரிசு கொடுக்கணும்’ என அமீர் கேட்க, ‘உனக்கு கொடுக்க என்கிட்ட என்னய்யா இருக்கு’ என கலைஞர் சிரித்தாராம். அமீர் தயங்கியபடியே ‘ஐயா உங்க பேனா எனக்கு ஒன்று எனக்கு வேண்டும்’ என சொல்ல, உடனே சண்முகநாதனை அழைத்து அவர் பயன்படுத்திய ஒரு பேனாவை அமீருக்கு பரிசாக கொடுத்துள்ளார். இது எல்லாமே அமீர் ஒரு பேட்டியில் சொன்னது.
அதன் பின்னரும் கூட கலைஞரை அமீர் சில இடங்களில் விமர்சனம் செய்திருக்கிறார். ஆனால், அவர் மீது அமீருக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. கலைஞருக்கும் அமீர் ஒரு சாஃப்ட் கார்னர் இருந்து கொண்டே இருந்தது.
இதையும் படிங்க: கார்த்தி இப்படி இன்னொரு படம் நடிப்பரா?!.. சிவக்குமார் செய்வது சரியா?!.. வச்சு வாங்கும் கஞ்சா கருப்பு!..