Cinema History
எம்.ஜி.ஆர் படத்துக்காக சென்சாரையே ஏமாற்றி பாடல் எழுதிய வாலி!.. கவிஞர் செம கில்லாடிதான்!..
தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்கு போட்டியாக வந்து பாடல்களை எழுதி ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் வாலி. ரங்கராஜ் என்கிற தனது பெயரை சினிமாவுக்காக வாலி என வைத்துக்கொண்டார். என் எதிரே நிற்பவனின் பலமும் சேர்த்து வாலிக்கு வந்து விடும் என புராணங்களில் சொல்வதால் அதையே தனக்கு பெயராக வைத்துக்கொண்டார்.
துவக்கத்தில் வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் கிடைத்து பாடல்களை எழுதினார். கண்ணதாசனிடம் போக முடியாதவர்கள் வாலி பக்கம் போனார்கள். ஏனெனில் கண்ணதாசன் அப்போது பல படங்களிலும் எழுதும் ஒரு பிஸியான பாடலாசிரியராக இருந்தார்.
இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..
ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே அரசியல் ரீதியாக மோதல் வர தனது படங்களுக்கு வாலியை பாடல் எழுத வைத்தார் எம்.ஜி.ஆர். வாலியின் வரிகள் அவருக்கு பிடித்துப்போக ‘இனிமேல் எனக்கு வாலியே பாடல்களை எழுதுவார்’ என அறிவித்தார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கும் பாடல்களை எழுதினார் வாலி.
குறிப்பாக எம்.ஜி.ஆரின் அரசியல் தொடர்பான பாடல்களை எழுதி அசத்தினார் வாலி. ‘ஏன் என்ற கேள்வி.. நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ போன்ற பல பாடல்களையும் எழுதியவர் வாலிதான். சில சமயம் இது சென்சாரிலும் பிரச்சனை ஆகிவிடும். அதன்பின் பாடல் வரிகளை தணிக்கை குழு அதிகாரிகள் மாற்ற சொல்வதும், வாலி மாற்றி கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இதையும் படிங்க: வாலியை கொசு என எழுதிய பத்திரிக்கையாளர்!. அவரிடம் வாலி சொன்ன கமெண்ட்டுதான் ஹைலைட்!..
சில சமயம் மாற்றப்படும் வார்த்தையின் ஓசையை போலவே வரிகளை மாற்றி சென்சாரையே ஏமாற்றிவிடுவார் வாலி. அன்பே வா படத்துக்காக ‘புதிய வானம் புதிய பூமி’ பாடலை எழுதிய போது அதில் ‘உதய சூரியனின் பார்வையிலே உலகம் முழித்திக்கொண்ட வேளையிலே’ என எழுதி இருந்தார். ஏனெனில் எம்.ஜி.ஆர் அப்போது திமுகவில் இருந்தார். இது சென்சாரில் கண்டிப்பாக பிரச்சனை வரும் என ஏவி மெய்யப்ப செட்டியாரும் சொன்னார். ஆனால், வாலி அப்படி நடக்காது சார் என்றார்.
செட்டியார் சொன்னதுபோலவே சென்சார் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து பாடல் வரியை மாற்ற சொன்னார்கள். உதய சூரியனை மாற்றி ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என எழுதினார் வாலி. ‘அதென்ன புதிய சூரியன்?’ என கேட்டார் செட்டியார். ‘படத்தில் எம்.ஜி.ஆர் பாடும்போது அது உதயசூரியன் என்றுதான் கேட்கும். தியேட்டரில் கைதட்டல் பறக்கும்’ என சொன்னார் வாலி. அவர் சொன்னது போலவே நடந்தது. இப்போதும் அந்த பாடலை கேட்டால் எம்.ஜி.ஆர் உதய சூரியனின் பார்வையிலே என சொல்வது போலவே இருக்கும்
அதுதான் கவிஞர் வாலி!…