கலைஞர் சொன்ன ஒரு வார்த்தை....! அந்த படத்தில் நடிக்க மறுத்த கார்த்திக்...! அப்படி என்ன சொன்னாருனு தெரியுமா...
80, 90 களில் தமிழ் சினிமாவில் தனக்கே உரித்தான குறும்புத்தனமான பேச்சாலும் நடவடிக்கையாலும் பெண்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசீகரப்படுத்தியவர் நடிகர் கார்த்திக். நவரச நாயகன் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் கார்த்திக் நடித்த முதல் படம் அலைகள் ஓய்வதில்லை.
இந்த படத்தில் நாயகியாக நடித்த ராதாவுக்கும் இந்த படம் தான் முதல் படம். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் காதலர்களுக்கும் இந்த படம் ஒரு வித புது உணர்வை ஏற்படுத்திய படமாக அமைந்தது. படத்தின் இமாலய வெற்றியால் நடிகர் கார்த்திக் தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார்.
இவரது நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் காதலை மையமாக வைத்தே எடுக்கப்பட்டவையாக இருக்கும். இந்த நிலையில் மீண்டும் நடிகை ராதாவுடன் ஜோடி சேர வாய்ப்பு வந்திருக்கிறது நடிகர் கார்த்திக்கு. மலையாள ரீமேக்கான பஞ்சாக்னி படத்தின் தழுவல் படமான நியாய திராசு என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.
இதையும் படிங்கள் : விக்ரம் நடிச்சு ப்ளாப் ஆன படம்….! இயக்குனரின் இழப்பை ஈடுகட்ட நடிகை செஞ்ச காரியத்தை பாருங்க…
படத்திற்கு கலைஞர் கருணாநிதி தான் வசனகர்த்தா. படத்தின் துவக்கவிழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியிருக்கின்றனர் படக்குழு. விழாவிற்கு கலைஞர், நடிகர் கார்த்திக், நடிகை ராதா, நடிகர் ரகுவரன் உட்பட பலபேர் கலந்து கொண்டிருக்கின்றனர்.அப்போது பேசிய கலைஞர் நடிகை ராதா கேரளாவில் இருந்து வந்தாலும் தமிழில் தான் பேசினார். அதுபோல் ரகுவரனும் தமிழில் தான் பேசினார். ஆனால் என் அன்பு தம்பியான முத்துராமன் மகனான நடிகர் கார்த்திக் மட்டும் ஆங்கிலத்தில் உரையாடினார் என மேடையில் பேசிவிட்டாராம். இதனால் கடுப்பாகி போன நடிகர் கார்த்திக் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று ஒதுங்கி விட நடிகர் நிழல்கள் ரவி நடித்ததாக கருணாநிதியுடன் நெருங்கி பழகிய நண்பரும் தயாரிப்பாளருமான அழகப்பன் தெரிவித்தார்.