More
Categories: Cinema News latest news

Simran: சிம்ரன் காட்டிய நன்றியுணர்வு.. அசந்து போன கலைப்புலி தாணு! 15 வருடத்துக்கு பிறகும் இப்படியா?

Simran: தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். தொலைக்காட்சி தொகுப்பாளராக தன் கெரியரை ஆரம்பித்த சிம்ரன் ஹிந்தி மற்றும் பிற மொழி படங்களில் நடித்து தன்னுடைய கெரியரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினார். அதன் பிறகு இந்த தமிழ் சினிமா அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது.

விஐபி, நேருக்கு நேர், ஒன்ஸ்மோர், லவ் டுடே போன்ற படங்களில் நடித்து இரண்டே ஆண்டுகளில் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறினார். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய அளவில் தேடப்படும் நடிகையாகவே திகழ்ந்து வந்தார் .சமீப காலமாக தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களின் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: கங்குவா ஓடலனா என்ன!.. ஹேப்பி லுக்கில் சூர்யா!. வைரலாகும் சூர்யா 45 பட பூஜை புகைப்படங்கள்!..

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சமீபகாலமாகத்தான் ஒரு சில படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் .அவருடைய நடிப்பில் கடைசியாக அந்தகன் திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தற்போது அவருடைய கணவர் தீபக் பகாவின் தயாரிப்பில் தி லாஸ்ட் ஒன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் .

அது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரு பேன் இந்திய திகில் திரைப்படமாக உருவாகிறது .இந்த நிலையில் அவர் இந்த திரைத்துறைக்கு வந்து 28 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் அவருக்கு சமீபத்தில் சிறந்த நடிகை விருதை கொடுத்து கௌரவித்துள்ளது. விழாவில் கலைப்புலி எஸ் தானு சிம்ரன் பற்றிய சில நினைவலைகளை பகிர்ந்தார்.

இதையும் படிங்க: இப்படி நின்னா நாங்க காலி!.. அரைகுறை உடையில் கிக் ஏத்தும் மாளவிகா மோகனன்!..

1997 ஆம் ஆண்டு விஐபி போன்ற இரு படங்களுக்கு சிம்ரனை கமிட் செய்த தாணு அதன் பிறகு அவரை பார்க்கவே இல்லையாம்.  கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து அவர் ஒரு உச்சம் தொட்ட நடிகையாக மாற  ஈசிஆரில் ஒரு ஹோட்டலை திறந்தாராம் சிம்ரன். அந்த ஹோட்டலை திறக்க சிறப்பு விருந்தினராக தாணுவைத்தான் அழைத்தாராம். இதை குறிப்பிட்டு பேசிய தாணு அவரை நான் அறிமுகம் செய்து வைத்தேன் என்ற காரணத்தினால் இப்படி ஒரு கௌரவம் கொடுத்தார் சிம்ரன். அது அவருடைய நன்றியுணர்வை காட்டியது என தாணு கூறினார்.

Published by
Rohini