மறுபடியுமா? ரஜினியை வச்சு செஞ்சதே போதும்.. ரிஸ்க் எடுக்கும் விஜயகாந்தின் மாஸ் ஹிட் பட இயக்குனர்..

by Rohini |
rajini
X

rajini

சினிமாவை பொறுத்தவரைக்கும் சமீபகாலமாக ஆன்மீகத்தின் ஆதிக்கம் தலை தூக்கி ஆட ஆரம்பித்து விட்டது. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மற்ற மொழி சினிமாக்களிலும் ஆன்மீகம் சார்ந்த படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

rajini1

arun govil

ஆனால் இந்த மோகம் ஆரம்ப காலங்களிலே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிற விஷயம். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான தாணு சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறை படமாக்க திட்டமிட்டிருக்கின்றாராம். அந்தப் படத்தில் பாபாவாக நடிக்க ‘ராமாயணம்’ படத்தில் ராமராக நடித்த அருண்கோயில் என்பவரை தான் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறாராம் கலைப்புலி தாணு.

ஏற்கெனவே பாபா என்ற பெயரில் ரஜினி ஒரு படம் எடுத்து எப்பேற்பட்ட நஷ்டத்தை ஏற்படுத்தியது என்பது உலகறிந்த செய்தி. அதுமட்டுமில்லாமல் தன் குருவாக நினைக்கிற ராகவேந்திராவின் வாழ்க்கை வரலாறையும் படமாக எடுத்தார்.

rajini2

aravindraj

ஆனால் அந்த இரண்டு படங்களுமே அந்த அளவுக்கு வரவேற்பை பெற வில்லை. இந்த நிலையில் மறுபடியும் சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறா? என்று பல பேர் யோசிக்கின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த வாழ்க்கை வரலாற்று படத்தை யார் இயக்கப் போகிறார் தெரியுமா?

இதையும் படிங்க : அக்காவுக்கு வந்த வாய்ப்பை லாவகமாக கவ்வி பிடித்த ஊர்வசி… அன்னைக்கு மட்டும் அது நடக்கலைன்னா?

விஜயகாந்தை வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய ‘ஊமைவிழிகள்’ பட இயக்குனர் அரவிந்தராஜ் தான் இயக்கப் போகிறாராம்.

Next Story