Cinema History
மெய்யப்ப செட்டியாரை ஏமாற்றிய ஏவிஎம் குமரன்! ‘களத்தூர் கண்ணம்மா’வில் நடந்த ஆள்மாறாட்டம்
இன்று உலக சினிமாவையே ஆச்சரியத்தில் பார்க்க வைத்தவர் நடிகர் கமல்ஹாசன். அவர் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தில் அவரின் நடிப்பு அப்பவே அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆரம்பத்தில் ஏதோ வந்து வந்து போகிற மாதிரி காட்சிகளை எடுக்க கமல்ஹாசனின் நடிப்பை பார்த்து மிரண்ட மெய்யப்ப செட்டியார் கமலுக்காகவே அந்த படத்தில் சில பல மாற்றங்களை ஏற்படுத்தினார்.
படத்தின் பெருமை
அதுவும் அந்தப் படத்தின் பெரிய ஹைலைட்டே அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் தான். ஆனால் அந்தப் பாடல் உருவாவதில் ஏற்பட்ட சிக்கலை ஏவிஎம் குமரன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் சுதர்சனம் என்ற மாஸ்டர். அந்தப் படத்தில் முதல் பாடலாக ரெக்கார்டிங் செய்தது ஆடாத மனமும் ஆடுதே என்ற பாடல் தான்.
களத்தூர் கண்ணம்மாவில் தான் மெய்யப்ப செட்டியார் அவருடைய மகன்கள் ஆன ஏவிஎம் குமரன் ,சரவணன் ஆகியோரை உள்ளே இழுத்திருக்கிறார். அதுவரைக்கும் மெய்யப்ப செட்டியார் மட்டுமே எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்வாராம். அப்போது ஆடாத மனமும் ஆடுதே என்ற பாடல் வரிகளை கு.ப. பாலசுப்ரமணியம் கொடுக்க அதற்கு டியூன் போடுவதற்காக ஏவிஎம் குமரன் சுதர்சனிடம் கேட்டிருக்கிறார்.
பாலிவுட்டை விரும்பாத ஏவிஎம் குமரன்
அதற்கு சுதர்சனம் ஏவிஎம் குமரனை வேறொரு இடத்திற்கு அழைத்துக் கொண்டு போக அங்கு இருந்த ஹிந்தி கேசட்டுகளை எல்லாம் வாங்கிக் கொண்டு ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்திருக்கிறார். இங்கே வந்து ஒரு ஹிந்தி பாடலை போட்டு காட்ட இதுதான் இந்தப் பாடலுக்கு உண்டான டியூன் என சொல்லி இருக்கிறார். ஆனால் இது ஏவிஎம் குமரனுக்கு பிடிக்கவில்லையாம். அதை சுதர்சனிடம் சொல்லியும் “மெய்யப்ப செட்டியாரிடம் வேண்டுமென்றால் கேட்டுக் கொள்ளுங்கள். அவர் ஓகே என்று தான் சொல்லுவார் “என சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன மாதிரியே மெய்யப்ப செட்டியாரும் “இந்த டியூனுக்கு என்ன நல்லாத்தான் இருக்கிறது. இதையே வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம்.
அதேபோல அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடலுக்கும் ஒரு ஹிந்தி டியூனை போடலாம் என சுதர்சனம் சொல்ல ஒரேடியாக ஏவிஎம் குமரன் மறுத்து இருக்கிறார். இந்தப் பாடலுக்கான சிச்சுவேஷனை கதாசிரியர் ஜாவர் சீதாராமன் சொல்லிவிட்டு போக சுந்தர வாத்தியார் என்ற ஒரு கவிஞர் இந்த வரிகளை கொடுத்திருக்கிறார். அதன் பிறகு சுதர்சனம் ஏகப்பட்ட டியூன்களை கொடுத்தும் குமரனுக்கு பிடிக்கவில்லை .உடனே சுதர்சனத்திற்கு தெரியாமல் அவருடைய உதவியாளர் செங்கல்வராயன் “என்னிடம் ஒரு டியூன் இருக்கிறது .அதை வேண்டும் என்றால் கேளுங்கள்” என சொல்லி அந்த டியூனை வயலினில் வாசித்திருக்கிறார்.
உதவியாளருடன் சேர்ந்து குமரன் செய்த தில்லுமுல்லு
அது மிகவும் பிடித்து போய்விட்டது .அதே சமயம் நான் தான் போட்டேன் என்று சுதர்சனத்திடம் சொல்ல வேண்டாம் என அந்த உதவியாளர் சொல்லி இருக்கிறார். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று குமரனும் கூறிவிட்டாராம். மறுநாள் திரும்பவும் சுதர்சனத்தை டியுன் போட சொல்ல எப்பவும் போல பிடிக்காதவராக குமரன் அவர்களுடைய உதவியாளர்களை பார்த்து உங்களிடம் ஏதாவது டியூன் இருக்கிறதா என கேட்க செங்கல்வராயன் என்னிடம் ஒன்று இருக்கு அதைக் கேளுங்கள் என சொல்லிவிட்டு இதை வாசித்திருக்கிறார். உடனே குமரன் “இது நன்றாக இருக்கிறதே .இதையே வைத்துக் கொள்வோம்” என சொல்ல சுதர்சனமும் ஓகே என சொல்லி இருக்கிறார் .
ஆனால் மெய்யப்ப செட்டியார் இடம் உதவியாளர் தான் போட்டார் என்று சொல்ல வேண்டாம். நீங்கள் போட்டதாகவே இருக்கட்டும் என குமரன் சுதர்சனத்திடம் சொல்லி இருக்கிறார் .அதேபோல மெய்யப்ப செட்டியாரை வரவழைத்து அவரிடம் போட்டுக்காட்ட அந்த ட்யூனை ஓகே பண்ணி இருக்கிறார் மெய்யப்ப செட்டியார்.
இதையும் படிங்க : பெட் ரூமில் கேமராவா? சம்யுக்தாவால் பலி ஆடாக மாறிய அந்த ஜோடி! விஷ்ணு எச்சரிக்கை