Connect with us

Cinema News

தெறிக்கவிடும் டோலிவுட்!.. 1000 கோடி வசூல் எல்லாம் அசால்ட் மேட்டரு!.. கல்கி பாக்ஸ் ஆபிஸ் இதோ!..

1000 கோடி வசூல் அள்ளுவது எல்லாம் தெலுங்கு சினிமாவுக்கு தற்போது அல்வா சாப்பிடுவது போல ஆகிவிட்டது. அதிலும் நடிகர் பிரபாஸ் நடிக்கும் படங்கள் எல்லாம் அசால்டாக முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலை அள்ளி வருகின்றன.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அரண்மனை 4 திரைப்படம் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. மகாராஜா திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 85 கோடி வசூலுடன் சுருண்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: கலைவாணரை சுடுவதற்கு பல நாளாக ஒத்திகை பார்த்த எம்.ஆர்.ராதா! அதிர்ச்சி பின்னணி

தொடர்ந்து ஒரு வருடத்தில் நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ், சலார் மற்றும் கல்கி 2898 ஏடி என மூன்று படங்கள் மூலமாகவும் 500 கோடி ஹேட்ரிக் வசூலை அருளியுள்ளார். கடந்த ஆண்டு ஷாருக்கான் இந்த சாதனையை செய்தது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கானை தொடர்ந்து பிரபாஸ் பாக்ஸ் ஆபிஸில் தனது கொடியை நாட்டி வருகிறார். அடுத்ததாக இந்த ஆண்டு அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 மற்றும் ஜூனியர் என்டிஆரின் தேவரா போன்ற படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன.

இதையும் படிங்க: ரஜினி, கமல் இணைந்து நடிக்கப் போறாங்களா? அந்த தயாரிப்புன்னா சாத்தியமாம்..!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் வெறும் 4 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை அள்ளி விட்டதாக தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் மேலும் ஒரு 500 கோடி ரூபாய் வசூலை கல்கி திரைப்படம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக பிரபாஸ் ராஜாசாப், ஸ்பிரிட், சலார் 2, கல்கி 2 என வரிசையாக வெற்றி மீது வெற்றி குவித்து இந்தியாவின் நம்பர் ஒன் வசூல் நாயகனாக மாற காத்திருக்கிறார்.

இதையும் படிங்க: கவுண்டமணியோடலாம் எப்படி நடிச்சாங்கன்னே தெரியல!… இப்படி சொல்லிட்டாரே விஜய் சேதுபதி!.

google news
Continue Reading

More in Cinema News

To Top