கல்கி படத்துல அமிதாப் பச்சனுக்கு இப்படியொரு கதாபாத்திரமா?.. பேர கேட்டாலே சும்மா பூமி அதிருதே!..

by Saranya M |   ( Updated:2024-04-21 09:19:55  )
கல்கி படத்துல அமிதாப் பச்சனுக்கு இப்படியொரு கதாபாத்திரமா?.. பேர கேட்டாலே சும்மா பூமி அதிருதே!..
X

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் மற்றும் கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த வரும் திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்து வரும் கல்கி படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு வெளியாக உள்ள பெரிய படங்களான இந்தியன் 2, கோட், வேட்டையன், புஷ்பா 2 உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னமும் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: தலைவர் 171 டைட்டிலே இப்படின்னா படம் எப்படி இருக்கும்?.. மெகா அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..

இந்நிலையில், பிரபாஸ் ரசிகர்கள் கடுப்பாகி விடக்கூடாது என்பதற்காக அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவை தற்போது படக்குழுவினர் பிரம்மாண்டமாக ஐபிஎல் போட்டியின் போது வெளியிட்டுள்ளனர். மகாபாரதத்தில் வரும் முக்கியமான கதாபாத்திரமான அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் இந்த கல்கி படத்தில் நடித்துள்ளார். அவரது அறிமுக வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

துரோணாச்சாரியா பாண்டவர்களுக்கு எதிராக குருசேத்திரப் போரில் சண்டை போட்டு வரும் நிலையில் அவரை அழிப்பது என்பது முடியாத காரியம் என்பதை தெரிந்து கொண்ட கிருஷ்ண பகவான் தர்மரை வைத்து அஸ்வத்தாமா இறந்தான் என பொய் கூறும்படி கூறுகிறார்.

இதையும் படிங்க: புளூசட்டை மாறன் சொல்வது சரிதான்!.. விஜய் ஆண்டனி சைலண்ட்டா இருக்கணும்!. பிரபலம் சொல்றாரு!..

, ஆனால் நான் பொய் பேச மாட்டேன் என தர்மர் சொல்லும் நிலையில், அஸ்வத்தாமா என்னும் யானையை பீமனை வைத்துக் கொள்ள வைத்து அஸ்வத்தாமா இறந்தது என இதையாவது சொல் என சொல்கிறார். அஸ்வத்தாமா யானை இறந்தது என தர்மர் சொல்லும் நேரத்தில் அஸ்வத்தாமா என்று சொன்னவுடனே கிருஷ்ணர் சங்கை ஊதி விடுவார்.

தனது மகன் இறந்து விட்டான் என தர்மர் சொன்னதும் அதை நம்பி துரோணர் தனது உயிரை மாய்த்துக் கொள்வார். மகாபாரத கதைப்படி அழியாத அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.

இதையும் படிங்க: வெண்ணக்கட்டி போல உடம்பு!.. லாஸ்லியாவை பார்த்து வெறியேத்தும் புள்ளிங்கோ!. செம பிக்ஸ்!..

Next Story