புளூசட்டை மாறன் சொல்வது சரிதான்!.. விஜய் ஆண்டனி சைலண்ட்டா இருக்கணும்!. பிரபலம் சொல்றாரு!..

Actor Vijay Antony: விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ரோமியோ’. இந்தப் படம் வெளியாகி ஓரளவு விமர்சனத்தை பெற்று வருகிறது. இதற்கிடையில் இந்தப் படத்தை பற்றி மோசமான முறையில் வழக்கம் போல ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் தெரிவித்திருந்தார். எந்த விமர்சனத்திற்கும் பதிலடி கொடுக்காத வரைக்கும் பிரச்சினை வராது.

ஆனால் விஜய் ஆண்டனி ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரோமியோவை ஒரு அன்பே சிவமாக மாற்றி விடாதீர்கள். அது நல்ல படம். போய் பாருங்கள் என விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர்கள் சித்ரா லட்சுமணன் மற்றும் தனஞ்செயன் இருவரும் விஜய் ஆண்டனி கொடுத்த பதிலடி குறித்து விவாதித்தனர்.

இதையும் படிங்க: ரொமான்ஸ்ல வீக்.. இது தெரிஞ்சா கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன்! ரெடின் வாழ்க்கை அப்போ அவ்ளோதானா

ப்ளூ சட்டை மாறனை பொறுத்தவரைக்கும் விஜய் ஆண்டனி ரியாக்ட் பண்ணியிருக்கவே கூடாது. விஜய் ஆண்டனி ட்விட் போட்டதும் அதற்கு பதில் ட்விட்டாக ப்ளூ சட்டை மாறன் ‘மனம் திருந்தி ப்ளூ சட்டை மாறன்’ என பதிவிட்டு கிண்டல் பண்ணியிருந்தார். அதனால் இதெல்லாம் விஜய் ஆண்டனிக்கு தேவையா என தனஞ்செயன் கூறினார்.

மேலும் ரோமியோ படத்தை பொறுத்தவரைக்கும் சாட்டிலைட் உரிமம், ஹிந்தி உரிமம், ஆடியோ உரிமம் என வணிக ரீதியாக வெற்றிபெற்ற படம்தான். அதனால் ப்ளூ சட்டை கருத்தை விஜய் ஆண்டனி பெரிதாக எடுத்திருக்க கூடாது என தனஞ்செயன் கூறிய போது அவரை குறிக்கிட்டு சித்ரா லட்சுமணன் ‘வணிக ரீதியாக என்று சொல்லும் போது எல்லா ரைட்ஸையும் சேர்த்து சொல்கிறீர்கள். ஆனால் ரோமியோ படத்தை திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்’ என கூறினார்.

இதையும் படிங்க: விஜய் பட நடிகைக்கு விஜயகாந்த் வைத்த செல்லப் பெயர்!.. குசும்பு பிடிச்சவர் போல கேப்டன்!..

ஆகவே ரோமியோ படம் விமர்சன ரீதியாக பெரிதாக பேசப்படவில்லை என சித்ரா லட்சுமணன் கூறினார். பழைய கதை என்றும் சொல்லி வருகிறார்களாம். மேலும் ப்ளூ சட்டை மாறன் மட்டும் இந்தப் படத்தை விமர்சனம் செய்யவில்லை. பல பத்திரிக்கைகள் ரோமியோ படத்தை பற்றி நல்ல வகையில் விமர்சனம் செய்யவில்லை. அப்படி இருக்கும் போது இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் ஏன் வரவில்லை என சித்ரா லட்சுமணன் விஜய் ஆண்டனி குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.

 

Related Articles

Next Story