Cinema News
என்னதான் கல்கியா இருந்தாலும் எங்க தளபதி காலுக்கு கீழத்தான்!.. அப்படியொரு ரெக்கார்டு இருக்கு!..
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் உலக அளவில் இதுவரை 600 கோடி ரூபாய் வசூலை அள்ளி ஜெயிலர் மற்றும் லியோ படங்களின் வாழ்நாள் வசூலை ஒரே வாரத்தில் முறியடித்து விட்டது. ஆனாலும், லியோவின் இந்த ஒரு வசூல் சாதனையை கல்கி திரைப்படத்தால் முறியடிக்கவில்லை எனக் கூறுகின்றனர்.
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், ஷோபனா, பசுபதி, ராஜமௌலி, ராம்கோபால் வர்மா, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கல்கி திரைப்படம் உலகளவில் ரசிகர்களை ஒரே வாரத்திற்குள் தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: சூர்யாவுக்கு இதனால் தான் திமிரு அதிகமாகிடுச்சு!.. இயக்குனர்களின் சாபங்களை வாங்கிக் கட்டிக்கிறாரு!
திங்கட்கிழமை வரை அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்து வந்த கல்கி படக்குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆன நேற்று இதற்கு மேல் அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம் என பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை அறிவிக்காமல் அப்படியே கடந்து சென்றுவிட்டனர்.
வார நாட்களில் கல்கி திரைப்படம் வழக்கம் போல டல் அடிக்க ஆரம்பித்து விட்டதாக கூறுகின்றனர். இரண்டாவது வாரத்தில் இந்த படம் பிக்கப் ஆனால் தான் 1000 கோடி வசூலை பார்க்க முடியும் என்றும் இல்லை என்றால் அதிகபட்சம் 700 முதல் 800 கோடி வசூல் தான் வரும் என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஒருத்தருக்கும் ஒத்த பைசா கொடுக்காத வடிவேலு வெங்கல் ராவுக்கு கொடுக்க காரணம்!.. சீக்ரெட் சொன்ன நடிகர்..
600 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படம் ஒரு வாரத்தில் 600 கோடி வசூலை பெற்றுவிட்டது. ஆனால், முதல் வார கலெக்ஷனை பொறுத்தவரை ஓவர்சீஸில் கல்கி திரைப்படம் 17.96 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது. ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் வாரத்தில் அதிகப்படியாக 18.24 மில்லியன் வசூல் செய்து மாஸ் காட்டுகிறது.
600 கோடி பட்ஜெட்டில் உருவான கல்கி படமே விஜய்யின் லியோ வசூலை வெளிநாட்டில் தாண்ட முடியவில்லை என விஜய் ரசிகர்கள் பிரபாஸ் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர். மொத்த வசூலில் லியோவை முந்தி நாங்க எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம் என பிரபாஸ் ரசிகர்கள் பதிலுக்கு பல்பு கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அரண்மனை 4, மகாராஜா ரெண்டுமே 100 கோடி வசூல் பண்ணல!.. மனசாட்சியோடு உருட்டுங்கப்பா!..