Cinema News
அல்லு அர்ஜுன் மாஸ்னா!.. நான் பக்கா மாஸ்!.. ஓடிடி பிசினஸில் ஓங்கி அடிச்ச கல்கி!.. இத்தனை கோடியா?..
இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் லைப் டைம் பாக்ஸ் ஆபிஸ் வசூலே இந்த அளவுக்கு வராத நிலையில் கோலிவுட் நடிகர்கள் தங்கள் படங்களின் ஓடிடி உரிமத்தை பலநூறு கோடிகளுக்கு விற்பனை செய்து வருவது ஒட்டுமொத்த திரைத்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அல்லு அர்ஜுனுக்கு முன்பாகவே ராஜமௌலி இயக்கத்தில் நடித்து பாகுபலி படம் மூலம் பிரபாஸ் பேன் இந்தியா ஸ்டாராக மாறினார். பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டால் வசூல் ரீதியாக அந்த படங்கள் சொதப்பின.
இதையும் படிங்க: ஹீரோக்கள் என்னை மதிக்கிறதே இல்லை!.. ஹீரோயின்கள் தான் சான்ஸ் கொடுக்கிறாங்க.. கோபி நயினார் வருத்தம்!..
கடைசியாக கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஆண்டு பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் 700 கோடி ரூபாய் வசூல் ஈட்டி மிகப்பெரிய சாதனை படைத்தது. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நடிகர் திலகம் சாவித்திரியின் பயோபிக் படமான மகாநடி தெலுங்கிலும் தமிழிலும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது பெற்ற தந்த படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதா பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கல்கி திரைப்படத்தின் ஓடிடி உரிமம் 250 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: குஷி ஜோதிகா இடுப்பை விட இது சூப்பரா இருக்கே!.. பிகில் நடிகை எப்போ இப்படி காட்ட ஆரம்பிச்சாரு!..
முன்னதாக அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் 250 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் வாங்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், கல்கி படத்தின் தென்னிந்திய ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் 150 கோடி ரூபாய்க்கும், இந்தி ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக 100 கோடி ரூபாய்க்கும் வாங்கியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மற்ற தென்னிந்திய நடிகர்கள் இந்த உச்சத்தை எப்போது தொடுவோம் என்கிற கனவில் தத்தளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மட்டும் தான் மோசம்!.. காஷ்மீர்ல கூட இந்த கொடுமை இல்லை.. விஷால் பகிரங்க குற்றச்சாட்டு!..