வேற வழியே இல்லாம கடமைக்குன்னு எடுத்த படம்… ஆனா செம ஹிட்… எப்படிப்பா??
“வெண்ணிற ஆடை”, “காதலிக்க நேரமில்லை”, “ஊட்டி வரை உறவு”, போன்ற பல கிளாசிக் திரைப்படங்களை இயக்கியவர் சி.வி.ஸ்ரீதர். இவர் தொடக்கத்தில் “இரத்த பாசம்”, “அமர தீபம்”, “உத்தம புத்திரன்” போன்ற பல திரைப்படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றினார்.
இத்திரைப்படங்களை தொடர்ந்து தனது பங்குதாரரான வீனஸ் பிக்சர்ஸ் கிருஷ்ணமூர்த்தியிடம் முக்கோண காதல் கதை ஒன்றை கூறினார். இந்த கதை கிருஷ்ணமூர்த்திக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதற்கு முன் ஸ்ரீதர் கதை வசனம் எழுதிய “அமர தீபம்” திரைப்படத்தின் கதையும் ஒரு முக்கோண காதல் கதைதான். ஆதலால் ஸ்ரீதர் கூறிய முக்கோண காதல் கதை, “அமர தீபம்” படத்தை போன்ற ஒரு முக்கோண காதல் கதையாகத்தான் இருப்பதாக கிருஷ்ணமூர்த்திக்கு தோன்றியது.
ஆதலால் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதரிடம் “நீங்கள் கதை வசனம் எழுதிய அமர தீபம் திரைப்படம் போன்ற ஒரு முக்கோண காதல் கதையைத்தான் இப்போதும் கூறுகிறீர்கள். ஆதலால் வேறு ஒரு புதிய கதையை கூறுங்கள்” என கூறினாராம். ஆனால் ஸ்ரீதரோ “அமர தீபம் கதை வேறு மாதிரியான ஒரு முக்கோண காதல் கதை, இப்போது நான் சொன்னது புது மாதிரியான முக்கோண காதல் கதை” என்று கூறி கிருஷ்ணமூர்த்திக்கு மறுப்பு தெரிவித்தார்.
ஆனால் ஸ்ரீதர் கூறியதை கிருஷ்ணமூர்த்தி ஏற்கவில்லை. ஆனாலும் ஸ்ரீதருக்கு அந்த கதையில் மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது. ஆதலால் புதிதாக பல காட்சிகளை அந்த கதையில் சேர்த்து அந்த கதையை மெருகேற்றினார் ஸ்ரீதர். அதனை தொடர்ந்து சில நாட்கள் கழித்து வீனஸ் பிக்சர்ஸ் கிருஷ்ணமூர்த்தி மீண்டும் ஸ்ரீதரை அழைத்தார்.
“பல நாட்களாக நமது நிறுவனம் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. ஏதாவது புதிய கதை இருக்கிறதா?” என கேட்டார். அதற்கு ஸ்ரீதர் “என்னிடம் எந்த புதிய கதையும் இல்லை. நான் உங்களிடம் ஏற்கனவே கூறிய முக்கோண காதல் கதைதான் இருக்கிறது” என கூறினார். இதனை கேட்ட கிருஷ்ணமூர்த்தி, “சரி, நமக்கு வேற வழி இல்லைன்னு நினைக்கிறேன்” என சலித்துக்கொண்டு அந்த கதையை படமாக்க ஒப்புக்கொண்டார் கிருஷ்ணமூர்த்தி. மேலும் அந்த கதையை ஸ்ரீதரே படமாக இயக்கினால் நன்றாக இருக்கும் என பல நண்பர்கள் கூற அதற்கு கிருஷ்ணமூர்த்தியும் சரி என்று ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க: “விதி தன்னோட வேலைய காமிச்சிருச்சி”… வடிவேலுவை வம்புக்கு இழுக்கும் பிரபல காமெடி நடிகர்… இவ்வளவு ஓப்பனாவா பேசுறது!!
இவ்வாறு வீனஸ் பிக்சர்ஸ் கிருஷ்ணமூர்த்திக்கு நம்பிக்கையே இல்லாமல் ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம்தான் “கல்யாண பரிசு”. இத்திரைப்படத்தின் தயாரிப்பில் ஸ்ரீதரும் ஒரு பங்குதாரர்தான். ஜெமினி கணேசன், சரோஜா தேவி, விஜயகுமாரி ஆகியோர் நடித்த “கல்யாண பரிசு” திரைப்படம் மாபெறும் வெற்றிப்பெற்ற திரைப்படம் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.