ஆண்ட்டி டூ பியூட்டி!... வைரலாகும் கல்யாணி பிரியதர்ஷனின் பழைய புகைப்படம்.. பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க…
Kalyani Priyadharshan: தற்போதையை மல்லுவுட்டின் இளம் நாயகியாக இருக்கும் கல்யாணி பிரியதர்ஷனின் பழைய புகைப்படங்கள் சில இணையத்தில் லீக்காகி இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கே அது ஷாக் கொடுக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் முன்னாள் நடிகை லிசியின் மகள் தான் கல்யாணி. இவர் கிரிஷ் 3 திரைப்படத்தில் சாபு சிரிலுக்கு உதவி புரோடக்ஷன் டிசைனராக தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கினார். அதன் பின்னரும் புரோடக்ஷன் பணிகளில் மட்டுமே பணிபுரிந்து வந்தார். தொடர்ந்து, அகில் அக்கினினியின் ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக எண்ட்ரி கொடுத்தவர் கல்யாணி.
இதையும் படிங்க: கார்த்திக்,வடிவேலு நடித்த அந்த சூப்பர்ஹிட் படக்காட்சிகள் அப்பவே வந்திருக்கா!.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ?..
அதே வருடத்தில் ஹலோ டேடி என்ற மலையாள படத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அப்படமும் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக அவர் நடித்த மாநகரம் திரைப்படம் செமஹிட் ஆனது. இருந்தும் தமிழில் அவருக்கு தொடர் வாய்ப்புகள் அமையவில்லை. ஸ்லிம்மாக இருக்கும் கல்யாணி சில வருடம் முன்னர் கொழுக்கு மொழுக் பேபியாக இருந்த புகைப்படம் தற்போது மீண்டும் வைரலாகி இருக்கிறது.
பார்க்கவே வித்தியாசமாக இருக்கும் கல்யாணி கொஞ்சம் வயதாகி இருப்பது போலவும் காட்சி அளிக்கிறார். ஆனால் அதன் பின்னர் நிறைய டயட் மற்றும் உடற்பயிற்சி செய்தே தற்போது இருக்கும் உடலமைப்புக்கு வந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் பார்ப்பவர்களுக்கு செம இன்ஸ்பிரேஷன் கொடுக்கும் அந்த புகைப்படங்கள் வாவ் சொல்ல வைக்க தவறவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இமேஜ் பற்றி கவலைப்படாத நடிகர் திலகம்… கிண்டல் செய்த ‘சோ’வையே நடிப்பால் அதிர வைத்த சிவாஜி..