கமல் படங்களில் நடித்த ஹீரோயின் பெயர்களை இதுவரை கவனிச்சிருக்கீங்களா? யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம்
Kamal Movies: சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒருவரின் வெற்றி அவரவர் அதிர்ஷ்டத்தை பொறுத்துதான் அமைகிறது. ஒரு சில பேர் ஜாதகம், நியுமராலஜி என்று அந்த வழியி செண்டிமெண்ட் பார்ப்பார்கள். இன்னும் சில பேர் தனக்கு நடந்த சொந்த அனுபவங்களில் இருந்து செண்டிமெண்டாக ஒரு விஷயத்தை கடைப்பிடிப்பார்கள்.
அந்த வகையில் கமல் படத்தில் இதுவரை யாரும் கவனிக்காத ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது கமல் படத்தில் நடித்த ஹீரோயின் கதாபாத்திரங்களை கவனித்தால் எல்லா படங்களிலும் ஒரே பெயராகத்தான் இருக்கும். அதுவும் குறிப்பாக கிரேஷி மோகன் கமல் கூட்டணியில் வெளிவந்த படங்களில் இந்த பெயரைத் தவிற் வேறு எந்த பெயரும் கதா நாயகிக்கு இருக்காது.
இதையும் படிங்க: சாரி என்னால முடியாது.. சிம்பு படத்திற்கு இசையமைக்க மறுத்த அனிருத்!. அட அவர்தான் காரணமா?!..
ஜானகி என்பதுதான் அந்த பெயர். பஞ்ச தந்திரம் படத்தில் சிம்ரன், பம்மல் கே சம்பந்தம் சிம்ரன், வசூல் ராஜா எம்பிபிஎஸ் சினேகா, காதலா காதலா ரம்பா, அவ்வை சண்முகி மீனா, தெனாலி ஜோதிகா என இந்த நாயகிகளுக்கு அந்தந்த படங்களில் ஜானகி என்றுதான் பெயராக இருக்கும்.
இதற்கான காரணத்தை இந்தப் படங்களுக்கு எல்லாம் வசனம் எழுதிய கிரேஷி மோகன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது கிரேஷி மோகன் தன்னுடைய சம்பளத்தை ஒரு படத்திற்கு பேசுவதற்கு முன்னாடி தான் எழுதும் கதாபாத்திரத்தில் ஹீரோயின் பெயர் ஜானகி என்றுதான் இருக்க வேண்டும் என்று கண்டீசன் போட்டேதான் ஒப்பந்தமாவாராம்.
இதையும் படிங்க: விஜய்சேதுபதி பாணியை பின்பற்றும் சூர்யா! இப்படியே போனா புஷ்ஷாகி வீட்டில் உட்கார வேண்டியதுதான்
அந்தளவுக்கு ஜானகி என்ற பெயர் மேல் அவருக்கு உள்ள பிரியத்துக்கான காரணம் அவருடைய ஆசிரியை பெயராம். ஒருவரது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருப்பது அவருக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள். அதே போல் கிரேஷிமோகன் வாழ்க்கையிலும் அவருடைய் ஆசிரியையான ஜானகி என்பவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறதாம்.
அதனால் அந்த ஆசிரியைக்கு மரியாதை கொடுக்கும் விதமாக அவர் எழுதிய படங்களில் ஹீரோயின் பெயரை ஜானகி என்று பயன்படுத்தி வந்திருக்கிறார். இது கமல் படம் என்று மட்டுமில்லை. அவர் எந்தப் படத்திற்கு வசனம் எழுதினாலும் அந்தப் படங்களில் எல்லாம் கண்டிப்பாக ஜானகி என்ற பெயர்தான் இருக்குமாம்.
இதையும் படிங்க: அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா இவர தூக்கி சாப்பிட்ருவாங்க!.. சூதானமா இருக்கணும் சூரி..