அந்தக் கேரக்டரில் நடிக்கத் தயங்கிய உலகநாயகன்...! ஆண்டவருக்கே இந்த நிலைமையா?

by sankaran v |   ( Updated:2024-09-12 22:28:31  )
kamal
X

kamal

உலகநாயகன் கமல் என்றாலே அவருக்கு சினிமா உலகில் தெரியாதது இல்லை என்பது தான் நம் நினைவுக்கு வரும். சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பில் சிறந்து விளங்குபவர் என்றே சொல்ல வேண்டும்.

தான் ஏற்கும் கதாபாத்திரங்களில் நடிப்பு அச்சு அசலாக இருக்க வேண்டும் என்பதில் மெனக்கெடுபவர் தான் அவர். அதற்காக எப்பேர்ப்பட்ட பயிற்சிகளையும் எடுப்பார். ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க வேண்டும் என்றால் அவர்களிடம் போய் அதன் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வார்.

டாக்டராக, ராணுவ அதிகாரியாக, சயின்டிஸ்டாக என எந்தத் துறையை எடுத்தாலும் அதன் ஒரிஜினாலிட்டி கொஞ்சமும் குறையாத வகையிலும் படம் பார்க்கும் ரசிகன் எந்த விதத்திலும் அந்தக் கேரக்டர் சரியில்லை என்று குறை சொல்லிவிடக்கூடாது என்பதிலும் கவனம் வைத்து நடிப்பவர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவருக்கே ஒருமுறை இப்படி ஒரு சோதனை. வாங்க என்னன்னு பார்ப்போம்.

Uyarnthavargal

Uyarnthavargal

எப்பேர்ப்பட்ட கதாபாத்திரம் என்றாலும் மிகச்சிறப்பாக நடிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். அப்படிப்பட்ட ஆற்றலைப் பெற்ற கமல்ஹாசனே ஊமைக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தயங்கினார் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை என்கிறார் கமல்ஹாசன்.

உயர்ந்தவர்கள் தன்னுடைய 47வது படம் என்றும் இந்தியில் 'கோசிஷ்' என்ற பெயரில் வந்த படத்தைத் தான் தமிழில் உயர்ந்தவர்கள் என்று டி.என்.பாலு உருவாக்கினார். இந்தியில் சஞ்சீவ்குமார் ஏற்றிருந்த வேடத்தைத் தான் நான் ஏற்றேன். அங்கு ஜெயபாரதி ஏற்ற வேடத்தைத் தான் இங்கு சுஜாதா ஏற்றிருந்தார்.

இந்தப் படத்திலே நீங்கள் ஊமையாக நடிக்க வேண்டும் என்று டிஎன்.பாலு சொன்ன போது நான் உண்மையிலேயே தயங்கினேன். இந்தப் படம் நிச்சயம் உங்களுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும். உங்களால் கண்டிப்பாக இதில் நடிக்க முடியும்னு எனக்கு நம்பிக்கையை ஊட்டினார்.

அவர் இந்த அளவு நம்பிக்கை வைத்திருக்கிறாரே. அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்தப் படத்தில் நடித்தேன்.

Also read: ரஜினியின் அந்த படம் சூப்பர் ஹிட்டா? எவ்ளோ லாஸ் தெரியுமா எங்களுக்கு? புலம்பிய பிரபலம்

ஆனாலும் அந்தப் படம் எனக்கு எதிர்பார்த்தப்படி நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. ஆனால் அந்தப் படம் சரியாக ஓடவில்லை. என் திரையுலகப் பயணத்தில் வித்தியாசமான வேடங்களில் நடிப்பதற்கு என்னைப் பல இயக்குனர்கள் ஊக்குவித்தார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர் தான் டி.என்.பாலு என்கிறார் கமல்.

மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Next Story