ரஜினி - கமல் பட டைட்டில்களை வைத்தே வசனம் எழுதிய விசு! எந்தப் படம் தெரியுமா? சொன்னா ஆச்சரியப்படுவீங்க
Rajini - Kamal: தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். ரஜினி இந்த சினிமா துறைக்கு வருவதற்கு முன்னரே கமல் ஒரு நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். கமல் கிட்டத்தட்ட 20படங்களுக்கு மேல் நடித்த பிறகு தான் ரஜினியின் எண்டிரி ஆரம்பமானது.
ஆரம்பத்தில் பல படங்களில் வில்லனாகத்தான் நடித்தார் ரஜினி. ஏன் கமல் நடித்த படங்களில் ரஜினிதான் வில்லனாக நடித்திருப்பார். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 18 படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர். அதில் தமிழ் படங்களோடு ஹிந்தி ,மலையாள, தெலுங்கு படங்களும் அடங்கும்.
இதையும் படிங்க: தாக்கியவர் மீது புகார் கொடுக்காத வனிதா..! என்ன பிலிம் காட்றீங்களா? பயில்வான் ரங்கநாதன் பகீர் கேள்விகள்..!
தமிழில் அபூர்வ ராகங்கள், ஆடுபுலி ஆட்டம், மூன்று முடிச்சு, தில்லுமுல்லு, அவள் அப்படித்தான், அவர்கள், பதினாறு வயதினிலே, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தப்பு தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை போன்ற படங்கள் அடங்கும்.
இந்த நிலையில் ரஜினியின் கெரியரில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது தில்லுமுல்லு திரைப்படம்தான். படம் முழுக்க நகைச்சுவையோடு நடித்திருப்பார் ரஜினி. இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் தேங்காய் சீனிவாசனுடன் வாதாடும் சீனில் கமல் தோன்றி நடிச்சிருப்பார்.
இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் டைம் சொல்றேன்! இந்த வலி யாருக்கும் வரக் கூடாது – இயக்குனரால் நடுத்தெருவுக்கு வந்த பாலாஜி முருகதாஸ்
அதில் தேங்காய் சீனிவாசனிடம் ஜூனியர் வக்கீல்ஸ் எல்லாம் சூழ கமல்ஹாசன் பேசும் காட்சி அமைந்திருக்கும். அதில் தன்னை லீடிங் லாயர் சாருஹாசன் என அறிமுகப்படுத்திக் கொண்டு தன் வசனத்தை பேச தொடங்குவார் கமல்.
அந்த வசனம் முழுவதும் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்த படங்களின் தலைப்பை கொண்டே வசனத்தை அமைத்திருப்பார் வசனகர்த்தா விசு.அதுமட்டுமில்லாமல் கமலின் அண்ணன் பெயரான சாருஹாசன் பெயரையே தன் பெயராக கமல் பயன்படுத்திக் கொள்வது மாதிரியும் அமைத்திருப்பார்.
இதையும் படிங்க:தவறாக நடந்து கொண்ட நடிகரை பெயரை சொல்லாமல் இருக்க காரணம் தெரியுமா? விசித்ரா விட்டதை போட்டுடைத்த ஷகீலா..!