என் பஞ்சே என்னை பஞ்சராக்குச்சு! திரை விமர்சகர் சுரேஷை மிரட்டிய கமல் – என்ன படத்துக்காக தெரியுமா?

Published on: February 16, 2024
kamal
---Advertisement---

Actor Kamal: 90ஸ் – களின் மிகவும் விருப்பப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தது சன் டிவியில் ஞாயிற்றுக் கிழமைகளில் காலையில் 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை பிரபல திரைவிமர்சகரும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்த சுரேஷ்குமார்தான் தொகுத்து வழங்கி வந்தார்.

அந்த நிகழ்ச்சி மட்டுமில்லாமல் சுரேஷும் மிகவும் பிரபலமானார். அவருக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். கணீர் குரலும் காந்தம் போல் ஈர்க்கும் அவரது தோற்றமும் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. அந்த வாரத்தில் ரிலீஸாகும் படங்களை வைத்து முதல் பத்து இடங்களை பிடிக்கும் படங்களை வரிசையாக அவர் தொகுத்து வழங்கும் விதம் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

இதையும் படிங்க: பாக்கியாவுக்கு அடுத்த சிக்கல் ஆரம்பிச்சிடுச்சு போல… சைக்கோ நம்பர் ஒன் எண்ட்ரியா?

அதோடு ஒவ்வொரு படத்திற்கும் ஏற்றவாறு படத்தின் பெயரை சொல்லி கூடவே ஒரு பஞ்சையும் சேர்த்து சொல்வார். அதுதான் மிகவும் ஹைலைட்டாக அமைந்தது. அப்படி விமர்சனம் சொல்லும் போது சில சவாலான சில விஷயங்களையும் சந்திக்க நேர்ந்தது என சுரேஷ் கூறினார்.

கமல் ஜோதிகா நடிப்பில் வெளியான தெனாலி படத்தை பற்றி விமர்சனம் செய்திருக்கிறார் சுரேஷ். கடைசியில் தெனாலி – கோமாளி என முடித்திருக்கிறார். கமல் ஏற்று இருக்கும் கேரக்டரை வைத்து கோமாளி என்ற பஞ்சை கொடுத்து முடித்தாராம் சுரேஷ்.

இதையும் படிங்க: இனிமே கோலிவுட்டே இவங்க கையிலதான்! பேக் டூ பேக் ஹிட் கொடுத்து மாஸ் நடிகர்களை ஃபீஸ் ஆக்கிய ஹீரோக்கள்

இந்த விமர்சனத்தை பார்த்த படத்தின் இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமாருக்கும் கமலுக்கும் கடுங்கோபம் வந்து விட்டதாக சுரேஷ் கூறினார். இதனால் பெரிய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் இவர் நேரிடையாக அவர்களிடம் பேசவில்லை என்றும் நிர்வாகத்தில் இருந்தே பேசி சமாளித்துவிட்டதாகவும் சுரேஷ் கூறினார்.

அதோடு நிர்வாகத்தினர் சுரேஷிடம் இனிமேல் பஞ்ச் சொல்லும் போது பார்த்து சொல்லுங்கள் என்று சொன்னதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: விஜயின் முதல் படத்தை பாராட்டி நடிகர் திலகம் கொடுத்த அன்பளிப்பு!.. இதெல்லாம் தெரியாம போச்சே!…

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.