அஜித்துக்கு டஃப் கொடுக்குறாரே!.. ஸ்டைலீஸ் லுக்கில் கமல்!.. ஹைப் ஏத்தும் அடுத்த பட அப்டேட்!…

ajith, kamal
Kamal: கமல், மணிரத்னம் இயக்கத்தில் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கான டப்பிங் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இது தவிர படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தொடர்ந்து வருகிறது. கமல், மணிரத்னம் காம்போவுடன் முதன் முறையாக சிம்புவும் இணைந்துள்ளார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். அதிரடி சண்டைக்காட்சிகளுடன் கூடிய ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தக்லைஃப் படத்தைத் தொடர்ந்து கமல் அன்பறிவு இயக்கத்தில் 234வது படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தைப் பற்றிய புது அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தனது யூடியூப் சானலில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இப்படி பதில் சொல்கிறார்.
அன்பறிவு இயக்கத்தில் கமல் நடிக்கும் படப்பிடிப்பு தக் லைஃப் படத்தின் வெளியீட்டுக்குப் பின்னால்தான் தொடங்கும் என்று நினைக்கிறேன் என்கிறார் சித்ரா லட்சுமணன்.
அஜித் ஸ்டைலிஷ் லுக்கில் குட் பேட் அக்லியில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இப்போது அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் கமல் அமெரிக்காவில் இருந்து தனது உடல் எடையைக் குறைத்து ஸ்டைலீஸாக போஸ் கொடுத்துள்ளார். அப்படின்னா அன்பறிவு படத்துல சம்பவம் தரமாக இருக்கும் என்றே தெரிகிறது. ஏற்கனவே அன்பறிவு பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் வேறு. சொல்லவா வேணும்?